சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதுவும் தெரியவில்லை.. சாலைகளை மொத்தமாக மறைத்த பனி மூட்டம்.. சென்னையில் மக்கள் கடும் அவதி!

சென்னை சாலைகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சாலைகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் குளிர் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாத இறுதிவரை தமிழகத்தில் குளிர் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர்நிலவி வருகிறது.மிக முக்கியமாக டெல்லியில் வெப்பநிலை வெறும் 2.4 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது.

அதேபோல் இமாச்சலப்பிரதேசம், மணாலி ஆகிய பகுதிகளில் உறை நிலைக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகி உள்ளது. தற்போது தென் மாநிலங்களுக்கு இந்த குளிர் பரவி உள்ளது.

 தலை தப்பியது.. பெரும் உற்சாகத்தில் திமுகவின் மூத்த தலைகள்.. கொண்டாட்ட மோடில் அறிவாலயம்! தலை தப்பியது.. பெரும் உற்சாகத்தில் திமுகவின் மூத்த தலைகள்.. கொண்டாட்ட மோடில் அறிவாலயம்!

பெங்களூர் எப்படி

பெங்களூர் எப்படி

பெங்களூரில் மிக கடுமையாக குளிரான வானிலை நிலவி வருகிறது. சென்னையில் நேற்று இரவு 18டிகிரி செல்ஸியஸ் நிலவியது. இன்று அதிகாலை 17 டிகிரி செல்ஸியஸ் நிலவியது. தற்போது 22 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது.

சென்னை நிலை என்ன

சென்னை நிலை என்ன

சென்னையில் தற்போது 26 டிகிரி செல்ஸியஸ் நிலவி வருகிறது. நேற்று இரவு 25 டிகிரி செல்ஸியஸ் நிலவியது. இன்று அதிகாலை 23 டிகிரி செல்ஸியஸ் நிலவியது. இதனால் மக்கள் குளிரில் கஷ்டப்பட்டனர்.

சாலை எப்படி

சாலை எப்படி

சென்னை சாலைகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சாலையில் எதிர் வரும் வாகனங்களை பார்க்க முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மொத்த சாலையையும் அப்படியே பனி மூடி போர்த்தி இருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் கிண்டியில் விமானம் இறங்குவது அதிகாலையில் தாமதம் ஆனது.

எங்கு எல்லாம்

எங்கு எல்லாம்

கிண்டி, வடபழனி, தரமணி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை,, பெரும்பாக்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா சாலை, மெரீனாவை அடுத்து உள்ள பகுதிகள், அடையார் பகுதிகளில் பெரிய அளவில் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்கள் சாலைகளில் வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

English summary
Heavy fog in Chennai: People struggles with low temperature for the second day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X