சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் ரணகளத்திலும் வெயிலுக்கு வந்த கிளுகிளுப்பை பாருங்க.. 10 ஊர்களில் சதம்.. மதுரையில் 106 டிகிரி

10 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ஸ்ஸு... ப்ப்பா... இப்பவே கண்ணை கட்டுதே.. என்று அடிக்கும் வெயிலை கண்டு மக்கள் பெரும்பாலான மாவட்டங்களில் கலங்கி போய் உள்ளனர்.

சென்னை வீதிகளில் மாலை நேரத்திலேயே நிறைய பிள்ளைகள் சுவர்ட்டர், மப்ளருடன் நடமாடுகிறார்கள் என்று செய்தி வந்து ஒரு மாசம்தான் ஆனது. இப்போதே அப்படியே நிலைமை தலைகீழ்!

பகலிலேயே வீட்டுக்குள் உட்கார முடியாத அளவுக்கு அனல், உஷ்ணம் வாட்ட ஆரம்பித்துள்ளது. இது சம்பந்தமாக சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது முன்எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. அதேபோல அரசு சார்பில் வெயில் கொடுமையிலிருந்து தப்பிக்க தடுப்பு நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

போலியோ சொட்டு மருந்து முகாம் வழக்கு... அஜித், விஜய், சூர்யா எதிர்மனுதாரராக சேர்ப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் வழக்கு... அஜித், விஜய், சூர்யா எதிர்மனுதாரராக சேர்ப்பு

100 டிகிரி

100 டிகிரி

என்னதான் சொன்னாலும், நடுரோட்டில் உச்சி மண்டை வெயிலில் செல்லும்போது கிறுகிறுத்து போய்விடுகிறது. நேற்றெல்லாம் வெயில் நிறைய மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலதான். சேலத்தில் 104 டிகிரி பாரன்ஹீட், திருத்தணியில் 104.5, திருச்சி, தர்மபுரியில் 104, நாமக்கல், நெல்லை, வேலூரில் 103, கோவையில் 101, கரூர் பரமத்தியிலும் 106 என்று இப்படி எல்லாமே 100 டிகிரியை தாண்டிதான் கொளுத்தி இருக்கிறது.

106 டிகிரியாம்

106 டிகிரியாம்

இதில் முக்கியமானது கொடுமையானதும் மதுரைதான். 106 டிகிரி பாரன்ஹீட் பதிவானதாம். 23 வருஷத்துக்கு முன்னாடி அதாவது மார்ச் மாதத்தில் கடந்த 1996-ம் ஆண்டு இவ்வளவு வெயில் இருந்ததாம்.

மதுரை

மதுரை

அது மட்டுமில்லை.. மதுரையில் கடந்த 140 வருடங்களில் மார்ச் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்று சொல்லப்படுகிறது. அதுக்கு பிறகு நேற்றுதான் இவ்வளவு வெயில் அடித்திருக்கிறது.

வெயில் தாக்கம்

வெயில் தாக்கம்

இப்போதைக்கு ஒரே ஆறுதல் என்னவென்றால், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெயில் தாக்கம் சற்றே குறையும் என்று ஒரு ஆறுதலான விஷயத்தை வானிலை ஆய்வு மையம் சொல்லி உள்ளது. தமிழகத்தை ஒட்டிய வங்க கடலின் வடமேற்கு திசையில் காற்றழுத்தம் காணப்படுவதாகவும், இது உள்தமிழகம் வரை பரவும் என்பதாலும் வரப்போகும் 2 நாட்களுக்கு வெப்பம் கொஞ்சம் குறையுமாம்.

English summary
Madurai temperature hits 106 degrees. It'smorethan 100 degrees in 10 cities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X