சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாங்க முடியவில்லை.. புதிய ரெக்கார்ட் வைத்த திருத்தணி.. தொடர்ந்து உயரும் வெப்பநிலை.. இதுதான் காரணம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இன்று திருத்தணி மற்றும் வேலூரில் வெப்பநிலை மிக அதிகமாக உயர்ந்து மோசமான சாதனை படைத்துள்ளது.

Recommended Video

    Tamilnadu Weatherman | Hot Weather In Tamilnadu | Reason

    மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாவட்டங்களில் மிக மோசமாக மழை பெய்து, புயல் அடித்து அங்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திரா பிரதேசம், தெலுங்கானாவில் லேசான மழை பெய்துள்ளது.

    கேரளாவில் இன்று காலை லேசான மழை பெய்தது. கன்னியகுமரியிலும் லேசான மழை இன்று காலை பெய்தது. ஆனால் தமிழகம் முழுக்க பிற பகுதிகளில் மிக கடுமையான வெயில் அடித்து வருகிறது. வெப்ப காற்றுடன் சேர்ந்து தமிழகத்தில் வெயில் அடித்து வருகிறது.

    பொறுத்திருந்து பாருங்கள்... இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்... வானதி சீனிவாசன் அதிரடிபொறுத்திருந்து பாருங்கள்... இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள்... வானதி சீனிவாசன் அதிரடி

    தமிழகம் நிலை என்ன

    தமிழகம் நிலை என்ன

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் திருத்தணி மற்றும் வேலூரில்தான் அதிகமாக வெப்பநிலை இருந்தது. அதன்படி வேலூரில் மொத்தம் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் வேலூரில் நிலவியது. இந்த வருடத்தில் வேலூரில் அடித்த மிக அதிகமான வெயில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் வேலூரில் அதிகமாக வெயில் அடித்தது. நேற்று அங்கு 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. திருத்தணியில் 111 டிகிரி பாரன்ஹீட் அடித்துள்ளது.

    சென்னை எப்படி

    சென்னை எப்படி

    சென்னையில் இன்று 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அடித்தது. அதேபோல் திருத்தணியில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அடித்தது. இன்று அதை விட அதிகமாக அடித்துள்ளது. தர்மபுரி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் அதிகமாக வெப்பநிலை இருந்தது. இந்த பகுதிகளில் 41 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை அடித்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து வருகிறது. முக்கியமாக வட மாவட்டங்களில் அதிகமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

    கடுமையான வெயில்

    கடுமையான வெயில்

    நேற்று 13 இடங்களில் வெயில் கடுமையாகப் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வெப்ப காற்றுடன் சேர்ந்து தமிழகத்தில் வெயில் அடித்து வருகிறது. சென்னை விமான நிலையம் மற்றும் திருத்தணியில் நேற்று 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. 2020லேயே நேற்றுதான் தமிழகத்தில் மிக அதிக வெப்பநிலை பதிவானது. இன்றும் அதேபோல் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    மிக தீவிரமாக இந்த ஆம்பன் புயல் வடக்கு நோக்கி சென்றுவிட்டது. இதனால் வட தமிழகத்திற்கு தரை காற்று வர தொடங்கி உள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வெப்பமான தரை காற்று வருகிறது. அங்கு வெப்பநிலை மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் வெப்ப காற்று அடித்து வெப்பநிலையை உயர்த்துகிறது. இதுதான் தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க காரணம்.

    English summary
    Heavy heat wave hits in Tamilnadu: Chennai and Vellore records high temperature today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X