சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 மாவட்டங்களில் வெப்பம் தகிக்கும்.. இதுல உங்க மாவட்டம் வருதானு பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: 5 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 4-ஆம் தேதி முதல் அக்னி எனப்படும் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இது வரும் 28-ஆம் தேதி வரை இருக்கும். கோடை வெப்பத்தை விட இந்த காலகட்டத்தில் அனல் கொளுத்தும்.

அதிலும் சென்னை, வேலூர், அரக்கோணம், திருத்தணி, திருச்சி, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் தகிக்கும். ஆனால் தென் மாவட்டங்களில் மழை பெய்யும்.

மே 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி.. முதல்வர்களிடம் மோடி கூறியது என்ன? மே 17ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிப்பு.. ஆனால் வேறு மாதிரி.. முதல்வர்களிடம் மோடி கூறியது என்ன?

வெயில் கொளுத்தும்

வெயில் கொளுத்தும்

இந்த நிலையில் கரூர், திருச்சி, சேலம், வேலூர், தருமபுரி மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என்றும், திருத்தணியிலும் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை

வறண்ட வானிலை

தமிழகத்தில் வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை மையம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.

எங்கே மழை

எங்கே மழை

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. ராமேஸ்வரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அது போல் புதுவையிலும் மழை கொட்டி தீர்த்தது.

ஏசி விற்பனை

ஏசி விற்பனை

ஆனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பேன், ஏசிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். ஏசி பயன்பாட்டால் இயற்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. லாக்டவுன் பிறகு வீட்டு உபயோக பொருட்களின் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஏசி விற்பனை ஜோராகும் என தெரிகிறது.

English summary
Heavy heat wave will affect 5 districts in the agni natchathiram period, says Chennai Meteorological Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X