சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை.. இங்கெல்லாம் பலத்த மழை பெய்யும்.. சென்னையில் டமால் டுமீல் மழை இருக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    சத்தியமங்கலத்தில் கனமழை! வீடுகளில் புகுந்த மழை நீர்!

    சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால், தேனி, திண்டுக்கல் உள்பட மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

    heavy rain alert in theni and dindigul, chennai may get thunderstorm rain

    தென்மேற்கு பருவக்காற்றின் சாதக நிலையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

    இதேபோல் காற்றின் வேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

    மெரீனா பீச்சில் அட்டகாசம்.. இளம் பெண்களை கட்டிப்பிடித்து அக்கிரமம்.. 3 வட மாநில இளைஞர்கள் கைதுமெரீனா பீச்சில் அட்டகாசம்.. இளம் பெண்களை கட்டிப்பிடித்து அக்கிரமம்.. 3 வட மாநில இளைஞர்கள் கைது

    சென்னையை பொறுத்து வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஓமலூர், திருவள்ளூர் நகர் பகுதிகளில் 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சென்யையை ஒட்டிய பூந்தமல்லி, சோழவரம், செம்பரம்பாக்கம், பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, உள்ளிட்ட இடங்களில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை நகர் பகுதிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 1 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக பதிவாகி உள்ளது" இவ்வாறு வானிலை அதிகாரிகள் கூறினர்.

    English summary
    heavy rain alert in theni and dindigul, chennai may get thunderstorm rain: says chennai metological
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X