சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பின்னி பெடல் எடுத்த பேய்மழை- பல இடங்களில் குறைந்தபட்சமே 5 செ.மீ மழை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று வெளுத்து கட்டிய கனமழை சென்னை மக்களை பெரும் மகிழ்ச்சியடைய வைத்தது. சென்னை நகரில் பல இடங்களில் குறைந்தது 5 செ.மீ மழை பெய்திருக்கலாமாம்..

Recommended Video

    200 ஆண்டுகளில் முதல் முறையாக வரலாறு படைக்கப்போகும் சென்னை

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் சென்னையை நோக்கி படையெடுத்தது மழை.

     சென்னையை தெறிக்க விட்ட மழை...பல இடங்களில் வெள்ளம்...மக்கள் மகிழ்ச்சி!! சென்னையை தெறிக்க விட்ட மழை...பல இடங்களில் வெள்ளம்...மக்கள் மகிழ்ச்சி!!

    சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!சென்னையின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை.. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

    சென்னையில் கனமழை

    சென்னையில் கனமழை

    சென்னை நகரின் பல இடங்களில் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது இந்த மழை. மழை தொடர்பாக சமூக வலைதளங்களில் சென்னைவாசிகள் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்தும் வருகின்றனர்.

    பெடலெடுத்த மழை

    குரோம்பேடை பகுதியில் 30 நிமிடங்களாக கொட்டி தீர்த்தது மழை. இதை வீடியோவாக பதிவிட்டுள்ள @sprabhumca ட்வீட்டிஸ்ட் இதற்கு கொடுத்த தலைப்புதான் அடேங்கப்பா... "Pichi pedal eduthufying" என்று மழையை கொண்டாடி இருக்கிறார் இந்த நெட்டிசன்.

    பல்லாவரம் சாலை நிலவரம்

    பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் மழைவெள்ளத்தில் வாகனங்கள் நீந்தி செல்லும் காட்சியை@unni82 என்ற பதிவர் வெளியிட்டுள்ளார். ஏதோ ஆற்றுக்கு நடுவே வாகனங்கள் செல்வது போல இருக்கிறது. தென்மாவட்டங்களை இணைக்கும் ஜி.எஸ்.டிசாலையில் பெருக்கெடுத்து ஓடியது மழைவெள்ளம்.

    என்னா மழை சாமீ

    @its_cpd என்பவர் தமது பதவில் Yeppa Enna Mazha என்ற தலைப்பில் படங்களை பதிவேற்றியுள்ளார். குரோம்பேட்டையில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கிக் கொண்டிருக்கும் இந்த காட்சியைக் குறிப்பிட்டுத்தான் எப்பா என்னா மழை என நெகிழ்ந்து போயிருக்கிறார்.

    English summary
    Heavy Rain caused heavy flooding near in Chennai on Tuesday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X