சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரை, திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட 9 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மழை அடி தூள்

வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரு நாள்களுக்கான மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரு நாள்களுக்கான மழை பற்றிய முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Heavy rain chances of Madurai, Dindigul and Theni and 9 districts says Met office

இன்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன் அறிவிப்பு:

தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோத்தகிரி (நீலகிரி) 8, திருமூர்த்தி அணை (திருப்பூர்) 7, அமராவதி அணை (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 5, ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 4, பெரியகுளம் (தேனி), வால்பாறை (கோவை) தலா 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்வதால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
The Met Office said that there is a possibility of rain due to the prevailing atmospheric circulation in the southwestern Bay of Bengal. 9 districts including Theni and Dindigul are likely to receive thundershowers. It will be cloudy for 24 hours in the suburbs of Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X