சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளுத்து வாங்கும் மழை... ஜில்லுனு ஆன சென்னை.. ஹேப்பி மோடில் மக்கள்.. இத விட வேறென்னங்க வேணும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    மழை நிலவரம்: இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

    சென்னை: சென்னையில் இன்று காலை மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் 1-ஆம் தேதி தொடங்கியது. ஆரம்பமே மிகவும் அசத்தலாக மழை பெய்தது. இதைத் தொடர்ந்து கஜா புயல் காரணமாக கனமழை பெய்தது.

    இதனால் டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில் டிசம்பர் மாதம் வரை மழை பெய்யும் என தனியார் வானிலை மையங்கள் தெரிவித்துள்ளன.

    கனமழை

    கனமழை

    இந்நிலையில் கிழக்கிலிருந்து வீசக்கூடிய காற்றின் ஈரப்பதம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் வரும் 6-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    மழை

    மழை

    கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு லேசான மழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    பாதிப்பு

    பாதிப்பு

    இதைத் தொடர்ந்து இன்று காலை முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, தாம்பரம், கிண்டி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தண்ணீர் பஞ்சம்

    தண்ணீர் பஞ்சம்

    போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் எழுவதால் சிலர் அலுவலகங்களுக்கு முன்கூட்டியே புறப்படுகின்றனர். மாணவர்களும் பள்ளிகளுக்கு நனைந்தபடி செல்கின்றனர். இந்த மழை நாளை மறுநாள் வரை பெய்யக் கூடும். டிசம்பர் மாதம் அதிக அளவு மழை பெய்தால் மட்டும் வரும் கோடை காலத்தில் சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முடியும்.

    English summary
    Heavy rain lashes out in Chennai and most of the places. School, colleges and Office goers suffers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X