சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை முதல் கோவை வரை.. பல மாவட்டங்களில் கன மழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை சென்னை, கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை உறுதி செய்யும் வகையில் சென்னையில் நள்ளிரவில் கன மழை பெய்து வருகிறது. பெங்களூரிலும் பகலில் ஆரம்பித்து, இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், புதன்கிழமை இரவு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதை பாருங்கள்:

"பணம் வசூல்" பண்ணாதீங்க.. நோகடிக்காதீங்க.. ரஜினி மக்கள் மன்றம் திடீர் அறிக்கை

சென்னை முதல் கோவை வரை

சென்னை முதல் கோவை வரை

சென்னை, கோவை, கடலூர், விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இரவு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கன மழை பெய்யுமாம்.

4 மணி நேரம் மழை

4 மணி நேரம் மழை

இரவில், அடுத்த 4 மணி நேரத்திற்கு தீவிர மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

பெங்களூரிலும் மழை

பெங்களூரிலும் மழை

இதனிடையே, புதன்கிழமை, இரவு 10 மணி முதல் சென்னையின் பல இடங்களிலும் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரத்தில் கன மழை பெய்தது. இந்த மழையின் எதிரொலி, புதன்கிழமை பெங்களூர் வரை இருந்தது. பெங்களூரில் பகல் நேரத்திலும், இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இந்த எச்சரிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மழை தொடரும்

மழை தொடரும்

வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்திருந்தாலும், பருவமழை அடுத்த வாரம் வரை தொடரும் என்று ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Satellite image shows dense cloud over Cuddalore, Villupuram, Kallakuruchi, Theni, Dindugal, Coimbatore, Virudhunagar and Ramanathapuram - intense spell continue for next three to 4 hours. Chennai also likely to witness heavy rainfall: Chennai MeT Department Director.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X