சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதுரையிலும் டெல்டா மாவட்டங்களிலும் நாலு நாளைக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம்

தமிழ்நாட்டில் வளிமண்டல கீழடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ள

Google Oneindia Tamil News

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Recommended Video

    Keeladi Agalvaraichi Wounders | Human Skeleton | Urai Kinaru | Oneindia Tamil

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வந்தாலும் பல மாவட்டங்களில் வெயில் அக்னி நட்சத்திர காலம் போல வாட்டினாலும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேற்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இந்த நிலையில் இன்று தொடங்கி 25ஆம் தேதி வரை வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

    திருச்சி வையம்பட்டியில் விநாயகா் சிலைகள் தயாரிப்பு கலைக்கூடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.. பரபரப்புதிருச்சி வையம்பட்டியில் விநாயகா் சிலைகள் தயாரிப்பு கலைக்கூடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்.. பரபரப்பு

    கடலோர மாவட்டங்களில் மழை

    கடலோர மாவட்டங்களில் மழை

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே போல உள் மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இடியுடன் மழை

    இடியுடன் மழை

    விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சியில் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்கால் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    25ஆம் தேதி வரை மழை

    25ஆம் தேதி வரை மழை

    வரும் 23,24,25ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வெப்பநிலை 35 டிகிரி

    வெப்பநிலை 35 டிகிரி

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகக் கூடும்.

    கடலுக்கு போகாதீங்க

    கடலுக்கு போகாதீங்க

    தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    English summary
    The Chennai Meteorological Department has forecast Rain in Tamil Nadu in the next 24 hours due to atmospheric circulation and convection. The Met Office has forecast showers in coastal districts and inland districts of Tamil Nadu including Vellore, Ranipettai, Salem, Dharmapuri, Trichy, Karur and Pudukottai and Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X