சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மொத்தம் 12 மாவட்டங்களில் செம மழை இருக்கு.. எங்கெல்லாம் தெரியுமா.. வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில்12 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: பகலில் வெயில், மாலையில் மழை என மாறி மாறி காணப்படுகிறது வானிலை.. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி மற்றும், தென்மேற்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்

    இப்போதைக்கு தென் மேற்கு பருவமழைக் காலம் நிலவி வருகிறது... இதனால் மாசம் ஆரம்பத்தில் இருந்தே தென் மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.. இதில் நம் தமிழகத்துக்கும் நல்ல மழை கிடைத்து வருகிறது.

     Heavy rain in 12 district of tamilnadu, imd chennai weather forecast

    ஆனால் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்துகிறது.. அதே மாலை நேரம் ஆகிவிட்டால், மழை பொழிவு அதிகமாக இருக்கிறது. அதனால், பகலில் வெயில், இரவில் மழை என மாறி மாறி நமக்கு வானிலை நிலவி வருகிறது.

    இந்த சமயத்தில், அடுத்த 48 மணி நேரத்தில் நமக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது.. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், தென் மாவட்டங்களில் தென்மேற்கு பருவக் காற்று, மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    அதன்படி, தற்போது, தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இன்றும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. திருநெல்வேலி, தென்காசி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு , கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டையில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்க பூமி,.. அமெரிக்கா ரிப்போர்ட்.. ஐநா கொடுத்த ரியாக்சன்தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் சொர்க்க பூமி,.. அமெரிக்கா ரிப்போர்ட்.. ஐநா கொடுத்த ரியாக்சன்

    மேலும் கேரளா மற்றும் கர்நாடக கடற்கரை பகுதியிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில் தமிழகத்துக்கு பலத்த மழை என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    English summary
    Heavy rain in 12 district of tamilnadu, imd chennai weather forecast
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X