சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வந்துட்டான்.. வந்துட்டான்.. ராம்நாட்டில் சூறை காற்றுடன் கனமழை.. தமிழகம் முழுக்க மழை இருக்கு மக்களே!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Tamilnadu Weather : தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு- தமிழ் நாடு வெதர்மேன்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் மழை பெய்ய போகிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. உள்கர்நாடகா முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது தற்போது வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீச போகிறது.

    Heavy rain in many parts of Tamilnadu including Ramanathapuram

    இந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நெல்லையில் சூறைகாற்று, இடி - மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடுமையான வெயில் வாட்டி வந்த ராமநாதபுரத்தில் கனமழை பெய்து வருகிறது. அங்கு கடுமையான இடியும், காற்றும் வீசி வருகிறது. அதேபோல் கொடைக்கானல், பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    தேர்தல் ரத்தா.. வீட்டு வாசல் நிலைப்படியை ஒரு கையால் ஸ்டைலாக பிடித்தபடி பேட்டி தந்த தில் துரைமுருகன்தேர்தல் ரத்தா.. வீட்டு வாசல் நிலைப்படியை ஒரு கையால் ஸ்டைலாக பிடித்தபடி பேட்டி தந்த தில் துரைமுருகன்

    தூத்துக்குடி, குமரியில் இன்று மாலைக்குள் மழை பெய்யும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இதனால் தற்போது மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து சந்தோசம் அடைந்து இருக்கிறார்கள். அதே சமயம் சென்னையில் வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும், ஆனால் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் கூறியுள்ளது.

    English summary
    Heavy rain pours in many parts of Tamilnadu including Ramanathapuram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X