சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உருவானது "மகா" புயல்.. ஒரே நேரத்தில் அரபிக் கடலில் 2 புயல்கள்.. காத்திருக்குது செம மழை

தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Moderate rain likely in parts of south Tamil Nadu | 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

    சென்னை: அரபிக் கடலில் மஹா புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    வானிலை மையம் இதுகுறித்து ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்தப் புயலுக்கு "மகா"(MAHA) என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக, இன்னும் 24 மணி நேரத்தில் 22 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை முடிந்து, அக்டோபர் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. ஒரு வாரம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஆனால் அதன்பிறகு மழையளவு பெருமளவு குறைந்துவிட்டது.

    இந்த சமயத்தில்தான், காற்றழுத்த தாழ்வு நிலை குமரி கடல் பகுதியில் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மையம் கொண்டிருந்தது. அதுதான் தற்போது புயலாக மாறியுள்ளது.

    பொளந்து கட்ட போகுது.. 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!பொளந்து கட்ட போகுது.. 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

    விடிய விடிய பெய்தது

    விடிய விடிய பெய்தது

    அதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையில் நேற்று காலையிலும் மழை, விடிய விடியவும் மழை கொட்டி தீர்த்தது. இதனால், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இன்று காலை முதலும் மழை ஆரம்பித்துவிட்டது.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    சென்னையை போலவே, காஞ்சிபுரம், திருவள்ளூர், வந்தவாசி சுற்று வட்டாரங்களிலும் இரவெல்லாம் மழை பெய்தது. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகை, வேதாரண்யம், சீர்காழி, கீழ்வேளூர் , பூம்புகார், மயிலாடுதுறை, உள்ளிட்ட இடங்களிலும், சேலம், விழுப்புரம், திருவாரூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கனமழை

    கனமழை

    இந்நிலையில், அரபிக் கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலானது, லட்சத்தீவு - மினிக்காய் தீவுக்கு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

    மாவட்டங்கள்

    மாவட்டங்கள்

    "மகா" புயல் காரணமாக மதுரை, குமரி, நெல்லை, ராம்நாட், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி ,அரியலூர் ,பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை ,நீலகிரி, தேனி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    எச்சரிக்கை கூண்டு

    எச்சரிக்கை கூண்டு

    அரபிக் கடலில் புயல் உருவாகி இருப்பதால் தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இன்று விடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    விடுமுறை

    விடுமுறை

    ராமநாதபுரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டது. கனமழை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் இன்றும் நாளையும் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

    புயல் கூண்டு

    புயல் கூண்டு

    இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

    இன்று விடுமுறை

    இன்று விடுமுறை

    அதேபோல் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை. வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக ராமநாதபுரம், தேனி, விருதுநகர், மதுரையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    3-ம் எண் கூண்டு

    3-ம் எண் கூண்டு

    ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குமரி கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பாம்பனில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று மீன்பிடிக்க சென்ற 9 படகுகளில் 3 படகுகள் கரை திரும்பி உள்ளனர். ஆக மொத்தம், பெரம்பலூர், அரியலூர், கரூர் என ஒட்டுமொத்த தமிழகமும் மழையால் குளிர்ந்து வருகிறது.

     ஒரே நேரத்தில் 2 புயல்கள்

    ஒரே நேரத்தில் 2 புயல்கள்

    அரபிக் கடலில் ஏற்கனவே கியார் என்ற புயல் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்னொரு புயல் உருவாகியிருப்பதால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இரு புயல்கள் அரபிக் கடலில்நிலை கொண்டிருப்பது ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

    English summary
    heavy rain in throughout tamilnadu and 8 districts holiday notice due to rain including nellai, tutucorin and vellore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X