சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்மாவட்டங்களில் இன்று மிக கனமழை... மழை படிப்படியாக குறையுமாம் - புவியரசன் தகவல்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொட்டோ கொட்டுனு கொட்டும் கனமழை… 23 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

    வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் அந்தமான் அருகே வங்கக்கடலில் நாளையும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதியும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதில் அந்தமான் அருகே உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

    குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அனேக இடங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ரம்யா கிருஷ்ணனை பார்க்கும்போது என்னை பார்த்த மாதிரியே இருந்தது...உணர்ச்சிவசப்பட்ட ஐக்கி ரம்யா கிருஷ்ணனை பார்க்கும்போது என்னை பார்த்த மாதிரியே இருந்தது...உணர்ச்சிவசப்பட்ட ஐக்கி

    கடலூரில் கொட்டிய மழை

    கடலூரில் கொட்டிய மழை

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு யைம இயக்குனர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு கடலூர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 17 செமீ மழை பதிவாகியுள்ளதாக கூறினார். கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 16, களியல் பகுதியில் 14 செமீ பதிவாகியுள்ளது. சிற்றாறு 13 செமீ ஊத்துக்கோட்டை 12 செமீ, புதுச்சேரி, தக்கலை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் தலா 11 செமீ மழை பதிவாகியுள்ளது. குழித்துறை, மகாபலிபுரம், வல்லம், குடிதாங்கி, வானமாதேவி பகுதிகளில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது. திருத்தணி, பேச்சிப்பாறை, பாபநாசம் , திருப்பூண்டி, சோழவரம், வேப்பூர், காவேரிப்பாக்கம் பகுதிகளில் தலா 9 சென் டிமீட்டர் மழை பெய்துள்ளதாக கூறினார்.

    விருதுநகர், ராமநாதபுரத்தில் மழை

    விருதுநகர், ராமநாதபுரத்தில் மழை

    இன்றைய தினம் விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

    புதுச்சேரி, காரைக்கால்

    புதுச்சேரி, காரைக்கால்

    நாளைய தினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    கடலோர மாவட்டங்கள்

    கடலோர மாவட்டங்கள்

    புதன்கிழமை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.. வியாழக்கிழமையன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

    மிதமான மழை

    மிதமான மழை

    தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.

    மழை படிப்படியாக குறையும்

    மழை படிப்படியாக குறையும்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறிய புவியரசன், மழை படிப்படியாக குறையும் என்று தெரிவித்தார். நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 80 சதவிகிதம் அதிகம் பெய்துள்ளதாக கூறிய புவியரசன், புதுச்சேரி, காரைக்காலில் 104 சதவிகிதம் கூடுலாக மழை பெய்துள்ளதாக கூறியுள்ளார்.

     குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

    நாளை தினம் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    கடலுக்குள் செல்ல வேண்டாம்

    கடலுக்குள் செல்ல வேண்டாம்

    இன்றைய தினம் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 1ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் புவியரசன் அறிவுறுத்தியுள்ளார்.

    English summary
    Virudhunagar, Ramanathapuram, Thoothukudi due to intensification of northeast monsoon. Kanyakumari and Tenkasi districts are likely to receive heavy rainfall, the Met office said. Madurai, Tirunelveli, Cuddalore, Villupuram, Mayiladuthurai and Nagai districts are also likely to receive heavy rains.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X