சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது- தாம்பரத்தில் 15 செ.மீ மழை

Google Oneindia Tamil News

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தாம்பரத்தில் 146 மி.மீ. மழை பெய்துள்ளது. கனமழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Newest First Oldest First
8:42 AM, 29 Nov

மதுரையில் மேலூர், மேலவளவு, அழகர்கோயில் பகுதிகளில் மழை
8:42 AM, 29 Nov

கனமழை: புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை
8:42 AM, 29 Nov

நாகை, வேதாரண்யம், தஞ்சை, திருக்காட்டுப்பள்ளி, ராமேஸ்வரத்தில் மழை
8:41 AM, 29 Nov

கனமழை- திருவாரூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
8:41 AM, 29 Nov

கனமழை: திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
12:09 PM, 28 Nov

சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்பு- புவியரசன் தகவல். கடலோர மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு
10:21 AM, 28 Nov

சென்னை மேற்கு பெருங்களத்தூர் கிருஷ்ணா நகர் - இரும்புலியூர் செல்லும் சாலையில் மழை வெள்ளம்
10:19 AM, 28 Nov

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை சேலையூர் வீடுகள்
10:10 AM, 28 Nov

கடலூர், சிதம்பரம் பகுதிகளில் நேற்று மாலை முதல் மிதமான தொடர் மழை. திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை. திருவண்ணாமலை, செய்யாறு உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை.
9:57 AM, 28 Nov

தமிழகம், புதுவையில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல்
9:57 AM, 28 Nov

சேலம் கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் கனமழை
9:52 AM, 28 Nov

கனமழையால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் மிக மிக கடுமையான போக்குவரத்து நெரிசல்
9:51 AM, 28 Nov

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை
9:40 AM, 28 Nov

வடகிழக்கு பருமவமழை மீண்டும் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
9:40 AM, 28 Nov

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என தகவல்
9:23 AM, 28 Nov

சேலையூர் ஏரியை சுற்றிய பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது
9:23 AM, 28 Nov

செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய கனமழை
9:19 AM, 28 Nov

கனமழையால் தாம்பரம்- வேளச்சேரி சாலையில் கடுமையான போக்குவரத்து
9:19 AM, 28 Nov

விழுப்புரத்தில் திருவள்ளுவர் பல்கலை. கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு விடுமுறை
9:19 AM, 28 Nov

காஞ்சிபுரம் அகரம் தென்பகுதியில் கனமழையால் மின்கம்பத்தில் பெரும் தீ விபத்து
9:05 AM, 28 Nov

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து ஆசிரியர் முடிவெடுக்க அரசு உத்தரவு
8:25 AM, 28 Nov

சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும்
8:04 AM, 28 Nov

கனமழையால் சென்னை நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
8:04 AM, 28 Nov

தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது
8:04 AM, 28 Nov

கனமழை- திருவள்ளுவர் பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
8:04 AM, 28 Nov

விழுப்புரத்தில் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும்
8:03 AM, 28 Nov

சென்னை அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்
8:03 AM, 28 Nov

சென்னை பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு

Heavy rain lashed in Chennai today
English summary
Heavy rains lashed in the many areas of Chennai on today .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X