சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிகாலையில் சென்னையை மிரட்டிய கனமழை.. தற்போதும் "மங்காத்தா" விளையாடும் மழை

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பலத்த மழை - சென்னை வானிலை வார்னிங் - வீடியோ

    சென்னை: அதிகாலையில் சென்னையில் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளில் மழையும் ,வெயிலும் மாறி மாறி நிலவி வருகிறது.

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    அரபிக் கடலில் உருவான கியார் புயல், வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்தம் ஆகியவற்றால் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.!வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை வெளுக்கப்போகுது.!

    கனமழை

    கனமழை

    இந்த நிலையில் சென்னையில் அதிகாலை முதலே பலத்த இடி சப்தத்துடனும், மின்னல் வெட்டுக்களுடனும் கனமழை பெய்தது. முகப்பேர் மேற்கு, அண்ணாநகர், வளசரவாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    வெயில்

    வெயில்

    இதனால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என காத்திருந்து காத்திருந்து மாணவர்கள் ஏமாற்றுடன் பள்ளிக்கு சென்றனர். அதிகாலை மழை சற்று ஓய்ந்த பிறகு , சென்னையில் வெயில் எட்டி பார்த்தது.

    புறநகர் பகுதி

    புறநகர் பகுதி

    பின்னர் வானம் மேக மூட்டமாக இருப்பதும், வெயில் வருவதுமாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னை புறநகர்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    வெளுக்கும் கனமழை

    வெளுக்கும் கனமழை

    பல்லாவரம், செம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்கிறது. இடையே வெயில் அடித்த நிலையில் தற்போது விட்டு விட்டு கன மழை பெய்கிறது.

    English summary
    After heavy rain lashes in and around Chennai and suburbs with lightning and thunder now also rain continues in on and off position.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X