சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை முதல் பெங்களூர் வரை.. வெளுத்து வாங்கும் கன மழை

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை முதல், கனமழை பெய்து வருகிறது.

இந்த மழையின் தாக்கம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் வரை நீடிக்கிறது. அங்கும் பிற்பகலுக்கு மேல் நல்ல மழை கொட்டியது.

Heavy rain lashes Chennai city on today

சென்னையின், மடிப்பாக்கம், வளசரவாக்கம், போரூர், நாவலூர் , நுங்கம்பாக்கம், அண்ணாநகர், ரெட் ஹில்ஸ், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகலுக்கு மேல் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக ரெட் ஹில்ஸ் பகுதியில் முட்டி வரை தண்ணீர் ஓடும் அளவுக்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து இதமான தட்ப வெட்பம் நிலவுகிறது.

Heavy rain lashes Chennai city on today

பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பிற்பகலுக்கு மேல் நல்ல மழை பெய்தது. எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மனஹள்ளி, மடிவாளா, ஜெயநகர், ஆடிகோடி, கோரமங்களா உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இல்லத்திற்கு சென்று திடீரென சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இல்லத்திற்கு சென்று திடீரென சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

மேலும், தமிழகத்தின், திருவள்ளூர், அரியலூர், திருப்பத்தூர் , தர்மபுரி, விழுப்புரம், திருப்பூர், மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களின், பல்வேறு பகுதிகளிலும் இன்று பரவலாக நல்ல மழை பொழிவு காணப்பட்டது. இந்த மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க கூடும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

English summary
Chennai rains: Rain lashes Chennai on today as well as Bangalore. The rain will continue for the next two days all over in Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X