சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை டம்.. டமால்.. டுமீல் சப்தத்துடன் இடி, மின்னல்.. பின்னி பெடலெடுத்த மழை.. மக்கள் ஹேப்பி

Google Oneindia Tamil News

Recommended Video

    Heavy rain lashes in Chennai and suburbs

    சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்து ஜில்லென்ற சூழல் நிலவியுள்ளது.

    ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடமேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் கேரளா, தெற்கு கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை மையம் தெரிவித்தது.

    Heavy rain lashes in Chennai

    இந்த நிலையில் காற்றின் வேக மாறுபாடு, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது.

    இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் கருமேகங்கள் ஒன்று சேர்ந்தது. இதையடுத்து கனமழை பெய்யத் தொடங்கியது.

    கோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்கோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்

    சென்னையில் முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, அமைந்தகரை, நெற்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, விமான நிலையம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்தெடுத்தது.

    இதனால் பூமி குளிர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த மழை இன்னும் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

    English summary
    Heavy rain lashes in Chennai and suburbs. People are welcoming this rain, as these rains will solve water crisis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X