சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டம் டமால்..டூமில்.. சப்தத்துடன் இடி.. சென்னையில் பரவலாக கனமழை.. திருமழிசையில் அடடா மழை அடை மழை

Google Oneindia Tamil News

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழையில்லாமல் இருந்தது.

Heavy rain lashes in Chennai and other parts with thunder

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது. அதில் சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகியவற்றில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

ச்சே ஜஸ்ட்மிஸ்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை.. சென்னையில் 20-இல் நல்ல மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன்ச்சே ஜஸ்ட்மிஸ்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை.. சென்னையில் 20-இல் நல்ல மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன்

இதையடுத்து முகப்பேர் மேற்கு, அம்பத்தூர், நொளம்பூர், கோடம்பாக்கம், வடபழனி, கே கே நகர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அது போல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசையில் கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

English summary
Heavy rain lashes in Chennai and other parts with thunder. Thirumazhisai gets more rain and water logged in roads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X