சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை மற்றும் புறநகர்களில் செம மழை.. இடியுடன் பெய்ததால் மக்கள் ஹேப்பி!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் புறநகர்கள் பலவற்றில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்கவுள்ளது. 28ம் தேதி மழை தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே டமால் டுமீல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

Heavy rain many parts of Chennai

சமீபத்தில் ஒரு மழை பெய்தது. மழை என்றால் அப்படி ஒரு மழை. சென்னை நகரையே புரட்டிப் போட்டு விட்டது. பல பகுதிகள் வெள்ளக்காடாகி விட்டன. மக்கள் தவித்துப் போய் விட்டனர். பல பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு மழை பெய்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்துள்ளது. இன்று மாலைக்கு மேல் அடையார், தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, ராயபுரம், திருவான்மியூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இடியுடன் கூடிய இந்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காலை முதலே பல பகுதிகளில் நல்ல வெயில் அடித்து வந்தது. ஆனால் மாலை 3 மணிக்கு மேல் திடீரென வானில் மேகக் கூட்டம் கூடி கருமை அடைந்தது. அதைத் தொடர்ந்து மழை வெளுத்தெடுத்தது. புறநகர்ப் பகுதிகள் பலவும் இந்த மழையை அனுபவித்தன. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதான் தக்காளி சீசனின் கடைசி மழை என்று சென்னை வெதர்மேன் தெரிவித்துள்ளார். எனவே மக்களே ஜாலியாக இதை என்ஜாய் பண்ணுங்க.. கூடுதல் கவனத்துடனும் இருங்க.

English summary
Heavy rain lashed many parts of Chennai this evening .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X