சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொட்டி தீர்த்த பேய் மழை.. சென்னை மக்கள் அவதி.. கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அதுவும் இன்று காலையில் நான் ஸ்டாப்பாக சும்மாக ஹெவியாக அடிச்சு ஊற்றிக்கொண்டிருக்கிறது.

இந்த மழையை சற்றும் எதிர்பார்க்காத சென்னை வாழ் மக்கள் எப்படி வேலைக்கு செல்வது எப்படி பள்ளி செல்வது என்று பெரும் கவலையுடன் இருக்கிறார்கள்.

சென்னை மட்டும் விசித்திரமான ஊர், மற்ற ஊர்களைப் போல் மழை வந்தால் அதனால் தாங்க முடியாது. ஒரே நாளில் பல செ.மீ மழை பெய்தால் நகரேமே வெள்ளக்காடாக மாறிவிடும். மழை செல்லும் வடிகால்கள் பல மாயமானதன் விளைவால் இன்று மக்கள் வெள்ளத்தில் மிதக்கிறார்கள். வெள்ளத்தில் நெருக்கடியுடன் வாழ்கிறார்கள்.

சென்னையில் மழை

இப்படி சூழலில் நேற்று வடகிழக்கு பருவ மழை இனிதே தமிழகத்தில் நேற்று துவங்கியது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெளிவாக சொல்லி இருந்தது. அடுத்த மூன்று நாள் கனமழை உறுதி என்று ... சொன்னது போலவே சென்னையில் நேற்று மாலை தொடங்கி தற்போது வரை அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

அடையாறு பகுதிகளில்

குறிப்பாக வடபழனி, கோயம்பேடு, கிண்டி, மதுரவாயல் போரூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம்,தியாகராய நகர், நந்தனம், மைலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, கிண்டி, அண்ணாநகர், பெருங்களத்தூர், விமானநிலையம், பல்லாவரம். குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், முகப்பேர், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. வடசென்னை பகுதிகள் என மொத்த சென்னையிலும் மழை வெளுத்து வருகிறது. சென்னை மட்டுமல்ல திருவள்ளூர், காஞ்சிபுரம், என அதனை சுற்றியுள்ள அத்தனை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

சாலையில் வெள்ளம்

பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனி சாலை, கிண்டி ரயில்நிலைய மேம்பாலப்பகுதிகள், நந்தனம் சிக்னல், கோடம்பாக்கம் சாலை, அண்ணாநகர்- கோயம்பேடு சாலை, போரூர் - பூந்தமல்லி சாலை, ஜிஎஸ்டி சாலை, நுங்கம்பாக்கம் சாலை, அண்ணா சாலை என திரும்பி பக்கம் எல்லாம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மழை தண்ணீர் மிதந்து செல்கின்றன.

சுரங்கபாதை பாதிப்பு

சென்னை தியாகராயர் நகர் அரங்கநாதன் சுரங்கபாதையில் பைப்புகள் சேதடைந்துள்ளது. இதனால் அந்த பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அந்த பகுதியில் செல்வோர் மாற்றுப்பாதையில் சுற்றிச்செல்லலாம். இதேபோல் இயல்பாகவே அதிகபோக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதிகள் சென்னை வாசிகளுக்கு நன்கு தெரியும் என்பதால் அந்த பாதைக்கு பதில் மாற்றுப்பாதைகளை பயன்படுத்தினால் அலுவலகத்திற்கு செல்வதற்கு எளிதாக இருக்கும்.

மின்சார ரயில்

சென்னையின் ஐடி பகுதிகளான ஓஎம்ஆர் சாலை, தரமணி பகுதிகள், அடையாறு- திருவான்மியூர் சந்திப்பு பகுதிகளில் சும்மாவே டிராபிக் ஜாம் தாருமாறாக இருக்கும். இப்போது கனமழை பெய்து வருவதால் அங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேர் ஒரே நேரத்தில் வேலைக்கு செல்லும் பீக் அவர்ஸ் நேரம் என்பதால் மக்கள் கடும் அவஸ்தையுடன் சாலையை ஊர்ந்து கடந்து வருகிறார்கள். பறக்கும் ரயிலில் பயணித்தால் தப்பிக்கலாம். எனினும் வேளச்சேரி பறக்கும் மின்சார ரயிலும் கூட்டம் இன்று அலைமோதுகிறது.


இந்த மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டது ஒரு புறம் எனில் பள்ளிக்கு மழையையும் பொருட்படுத்தாமல் சென்ற மாணவ மாணவிகள் கடும் அவஸ்தையுக்கு உள்ளாகினர்.மழையில் ஆட்டோவை தேடி, பேருந்தைதேடி அழைந்து அடித்து பிடித்து ஒவ்வொரு குழந்தைகளும் சென்ற காட்சியை காண முடிந்தது. வாகனங்களில் பெற்றோர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஓட்டிச்சென்று குழந்தைகளை பள்ளிகளில் விட்டுவந்தனர்.

மழைநீர் சேமிப்பு

இந்த மழையால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் நிச்சயம் அதிகரிக்கும். மக்கள் மழை நீரை சேமித்து வைக்கும் அமைப்பை ஏற்படுத்தி இருந்தால் அவர்கள் வீட்டில் நிலத்தடிநீர் நிச்சயம் சூப்பராக உயர்ந்திருக்கும். இதேபோல் சென்னைக்கு நீர் வழங்கும் ஏரிகளின் நீர் வரத்தும் அதிகரித்து இருக்கும். சென்னையில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக களபணியாற்றி வருகிறார்கள். கொட்டும் மழையிலும் அடைப்புகளை தேடித்தேடி சரி செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை மழையில் நனைந்த புகைப்படங்களை மக்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

English summary
Heavy rain occurred at over all places in chennai , roads flooded, traffic jams in many places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X