சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனமழை: பழைய கட்டடங்களில் வசிப்பவர்கள் வெளியேறுங்கள் - பேரிடர் மேலாண்மை அறிவிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பழைய கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம் , அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு கூறியுள்ளது.

Heavy rain: Residents evacuate old buildings - TamilNadu Disaster Management

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மதியம் 12 மணிவரை கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல் காலை முதலே தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் காலையில் ஓய்ந்த மழையானது மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது

Heavy rain: Residents evacuate old buildings - TamilNadu Disaster Management

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர், மயிலாடுதுறை ,நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,நெல்லை, மதுரை, தஞ்சை ,திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு மிதமான முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று தெரிகிறது.

Heavy rain: Residents evacuate old buildings - TamilNadu Disaster Management

தமிழகத்தில் அதிகபட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 18 செமீ., காஞ்சிபுரத்தில் 16 செமீ., மழையும் பதிவாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மழைப்பெய்து வருவதால் இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பொதுமக்கள் குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது நீர்நிலைகளில் குளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Heavy rain: Residents evacuate old buildings - TamilNadu Disaster Management

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம் , அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்களுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்! தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால்..கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது

Heavy rain: Residents evacuate old buildings - TamilNadu Disaster Management

பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள்! தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது, மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது நீர்நிலைகளில் குளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The State Disaster Management and Rescue Agency has advised those staying in old buildings to evacuate to safer places immediately as heavy rains continue to lash Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X