2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை... உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக மழை பெய்யும் என்று கூலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.
மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் 28ஆம் தேதி முடிவுக்கு வரப்போகிறது. பல ஊர்களில் வெயில் பட்டையை கிளப்புகிறது. பகலில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 6 செ மழை பதிவாகியுள்ளது. பெரம்பலூர், ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, விழுப்புரத்தில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.
சுள்ளென்று சுட்டெரிக்கும் சூரியன்..இடியும் மின்னலுமாய் கனமழை பெய்யுமாம்..வானிலை மையம் குட் நியூஸ்

வெப்பச்சலன மழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பு
நாளைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மிதமான மழை
28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேக மூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் இலட்சதீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.