சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரக்கோணத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை.. சிக்னல் கோளாறால் நடுவழியில் ரயில்கள் நிறுத்தம்

Google Oneindia Tamil News

வேலூர்: அரக்கோணத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக 3 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அக்னி வெயில் தமிழகம் முழுவதும் கொளுத்தி வருகிறது. வெயிலுக்கு பெயர் போன வேலூரில் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதேபோல் ஆந்திராவை ஒட்டிய திருத்தணி, திருவள்ளூர் பகுதிகளிலும் வெயில் கடுமையாக இருந்து வருகிறது.

Heavy rainfall in Arakkonam, Trains stop at the midway signal failure

இந்நிலையில் இன்று வெப்பச்சலனம் காரணமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது..

புகழ் பெற்ற அண்ணா பல்கலையில் அதிர்ச்சி.. காசுக்காக செய்த காரியத்தால் பேராசிரியர்கள் சஸ்பெண்ட் புகழ் பெற்ற அண்ணா பல்கலையில் அதிர்ச்சி.. காசுக்காக செய்த காரியத்தால் பேராசிரியர்கள் சஸ்பெண்ட்

குறிப்பாக வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் ரயில் சிக்னல்களில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வந்த 3 ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

கோவை இன்டர்சிட்டி, திருவனந்தபுர எக்ஸ்பிரஸ், பெங்களூரு லால்பக் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நீண்ட நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

English summary
Heavy rainfall in Arakkonam at vellore, Trains stop at the midway signal failure
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X