சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று முதல் ஒருவாரத்திற்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரியில் விடியவிடிய கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை!

    சென்னை: வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் நீடிக்கும் வெயில் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்ப சலனம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    heavy rainfall in tamilnadu next one week: says chennai meteorological dept

    வெப்பச்சலனம் காரணமாக வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, புதுச்சேரி ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

    'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ

    இதனிடையே கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறையும் என்றும் அங்கு விடுக்கப்பட்டு இருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையும் முடிவடைவதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக தேவாலாவில் 50 மிமீ மழை பெய்துள்ளது. சின்னகல்லார் 30 மிமீ, வால்பாறை 20 மிமீ மழை பெய்துள்ளது. இது தவிர தமிழகத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது.

    English summary
    chennai meteorological dept predict heavy rainfall in tamilnadu next one week from
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X