சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தை நோக்கி நெருங்குகிறது மேலடுக்கு சுழற்சி.. மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Weather Update | அரபிக் கடலில் உருவானது ஹிகா புயல்.. இந்த மாவட்டங்களுக்கு மழை இருக்கு

    சென்னை: காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளிலும், கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுபற்றி இன்று பகல் 1 மணியளவில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியானது, அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர்வதால், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வடதமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யவும், வாய்ப்பு உள்ளது.

    Heavy rainfall is expected in several parts of the Tamilnadu

    வரும் 25-ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்த அளவில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மோடிக்கு எதிரான போராட்ட களமாகவும் மாறிய 'ஹூஸ்டன் ஹவுடி மோடி'... பதாகைகளுடன் முழக்கம்!மோடிக்கு எதிரான போராட்ட களமாகவும் மாறிய 'ஹூஸ்டன் ஹவுடி மோடி'... பதாகைகளுடன் முழக்கம்!

    24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில், 15 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான, எச்சரிக்கையை. பொருத்தளவில் வரும் 24 மற்றும் 25 தேதிகளில் குமரிக்கடல் தென் தமிழக கடலோர, பகுதிகள் மற்றும் மால தீவு பகுதிகளில் வலிமையான சூறைக் காற்று வீச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் மேற்கூறிய இடங்களுக்கு இரு நாட்களுக்கு செல்ல வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

    English summary
    Heavy rainfall is expected in several parts of the Tamilnadu, including Chennai, for the next 3 days due to southerly humid winds from the Bay of Bengal, the Meteorological Department said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X