சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடிய விடிய சென்னையில் விளாசிய மழை.. செம ஜில், ஜில்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று நள்ளிரவு முதல், இன்று அதிகாலை வரை கனமழை தொடர்ந்தது. புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

Recommended Video

    Heavy rains continued in Chennai

    கிழக்கு மற்றும் மேற்கு திசை சந்திக்கும் மையப்புள்ளி தமிழகத்தின் வளி மண்டல மேலடுக்கில் நிலவுவதால் தமிழகம், மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Heavy rains continued in various parts of Chennai

    தமிழகத்தில் வெப்ப சலனம் நீடித்து வருவதை அடுத்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி பரவியிருந்ததால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை கொட்டியது.

    Heavy rains continued in various parts of Chennai

    இதேபோல நேற்றும் இரவு முதல் அதிகாலை வரை சென்னையில் மழை பெய்தது. இதனால் சென்னை நகரில் குளுமையான வானிலை நிலவுகிறது.

    ஒரே நாளில் 62,500 பேருக்கு கொரோனா.. ஆட்டம் காணும் அமெரிக்கா.. நோய் பரவலை தடுத்து ஐரோப்பா அசத்தல்ஒரே நாளில் 62,500 பேருக்கு கொரோனா.. ஆட்டம் காணும் அமெரிக்கா.. நோய் பரவலை தடுத்து ஐரோப்பா அசத்தல்

    மேலும், நேற்று இரவு முதல், தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பயிர்கள் புத்துணர்ச்சி பெற்று வருவதாக சாகுபடி செய்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    Heavy rains continued in various parts of Chennai

    புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

    English summary
    Heavy rains continued in various parts of Chennai, from midnight yesterday till early morning. Moderate rainfall in the suburbs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X