சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மணிக்கு 40 - 50 கிமீ வேகத்தில்.. சுழட்டி அடிக்க போகும் சூறாவளி.. 4 மாவட்டங்களில் கன மழை பெய்யுமாம்!

4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... இது அந்தந்த மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியும் வருகிறது.

சமீப காலமாக சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.. ஒரு சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தவும் செய்கிறது.

 heavy rains with thunder in 4 districts in tn, says chennai met dept

தற்போது 4 மாவட்டங்களுக்கு மட்டும் மழை கனமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வளிமண்டலத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இந்த கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்குமாம்.. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓட்டம் பிடித்த நகராட்சி ஊழியர்கள்.. டிராக்டரை ஓட்டி கொரோனா நோயாளியின் சடலத்தை அடக்கம் செய்த டாக்டர்ஓட்டம் பிடித்த நகராட்சி ஊழியர்கள்.. டிராக்டரை ஓட்டி கொரோனா நோயாளியின் சடலத்தை அடக்கம் செய்த டாக்டர்

ஜூலை 13-ம்தேதி கடலோர கர்நாடக பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 15, 16ம் தேதிகளில் கர்நாடகா, கேரள கடலோர பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்...

ஜூலை 13 முதல் 17 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

English summary
heavy rains with thunder in 4 districts in tn, says chennai met dept
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X