சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை முதல் முழு லாக்டவுன்.. மதுபான கடை முன்பு குடிக்காரர்கள் காத்திருப்பு.. சுடசுட வந்த சரக்குகள்

Google Oneindia Tamil News

கூடுவாஞ்சேரி: நாளை முதல் 4 மாவட்டங்களில் பொது முடக்கம் அமலுக்கு வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மதுக்கடைகளில் குடிக்காரர்கள் நீண்ட வரிசையில் மதுவாங்க காத்துக் கிடக்கிறார்கள்.

தமிழகத்தில் 50 நாட்கள் பொது ஊரடங்குக்கு பின்னர் கடந்த மே 16-ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. இதில் குடிக்காரர்கள் ஒன்றாக கூட்டமாக திரண்டுவிடாமல் இருப்பதற்காக 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது.

அது போல் சிகப்பு மண்டலங்களிலும் கன்டெய்ன்மென்ட் பகுதிகளிலும் மதுபான விற்பனை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் 50 நாட்களாக பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்பட மாநிலங்களில் டாஸ்மாக் மூலம் வருமானம் கிடைத்தது.

சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் இ பாஸ் இணையதளம் செயல்படவில்லை.. மக்கள் அவதி சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களில் இ பாஸ் இணையதளம் செயல்படவில்லை.. மக்கள் அவதி

தங்கு தடையின்றி

தங்கு தடையின்றி

சரக்கும் தங்கு தடையின்றி கிடைத்ததால் குடிமகன்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கடைத் திறப்பின் போது டாஸ்மாக் வாடிக்கையாளர்களிடம் கொரோனா பயம் இல்லையா என கேட்ட போது கொரோனாவாவது கிரோனாவாவது ஒரு குவாட்டர் உள்ளே போனால் எதுவும் கிட்ட வராது என கூறி காமெடி செய்தனர்.

மதுபானக் கடைகள்

மதுபானக் கடைகள்

இந்த நிலையில் நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் நாளையிலிருந்து அத்தியாவசிய கடைகள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கப்படும். வழக்கம்போல் டாஸ்மாக் மதுப்பானக் கடைகள் மூடப்படும் என தெரிகிறது.

கும்மாளம்

கும்மாளம்

கடந்த ஒரு மாதமாக மூச்சு முட்ட குடித்து கும்மாளம் போட்டவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது அரசின் இந்த உத்தரவு. இதையடுத்து முடிந்தவரை வாங்கி ஸ்டாக் வைத்து கொள்ள கூடுவாஞ்சேரியில் உள்ள மதுபான கடைகளுக்கு குடிக்காரர்கள் படையெடுத்தனர்.

புதிய சரக்குகள்

புதிய சரக்குகள்

பல கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்து கிடக்கிறார்கள். இந்த கூட்டத்தை அப்படியே கோழியை அழுத்துவது போல் அழுத்த லாரிகளில் பெட்டி பெட்டியாக புதிய சரக்குகள் வந்திறங்கியுள்ளன. இதனால் சரக்கு கிடைத்தே ஆகும் என்ற நம்பிக்கையில் குடிகாரர்கள் காத்து கிடக்கிறார்கள்.

English summary
Heavy rush in Kuduvancherry tasmac shops as from tomorrow full lock down implements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X