சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. உருவாகுது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை உட்பட சில பகுதிகளில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

    சென்னை: தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தொடங்கி கடந்த இரண்டு தினங்களாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது.

    இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், மதுரை,. புதுக்கோட்டை, தஞ்சாபூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர். புதுச்சேரி, நாகப்பட்டினம் என பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

     300 ஆண்டுகள் பழமையான சாவடி.. சொந்த செலவில் 6 அடிக்கு உயர்த்திய மக்கள்! 300 ஆண்டுகள் பழமையான சாவடி.. சொந்த செலவில் 6 அடிக்கு உயர்த்திய மக்கள்!

    கிழக்கு திசை காற்று

    கிழக்கு திசை காற்று

    இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி

    காற்றழுத்த தாழ்வு பகுதி

    அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு அபரபிக்கடல் மற்றும அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகஇந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

    கர்நாடகாவில் மழை

    கர்நாடகாவில் மழை

    இதன் காரணமாக தமிழகம் மட்டுமில்லாமல் புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    இதனிடையே நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கூறியிருந்தார். சூறாவளி காற்று வீசுவதால் இலங்கையின் தெற்கு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

    English summary
    heavy to very heavy rainfall over tamilnadu net 3 days : IMD said about tamilnadu weather
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X