சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மழையை வாரி வீசிய நிவர்.. ஜாவாவா?.. என்பீல்டா?.. எதா இருந்தாலும் தள்ளு தள்ளு தள்ளேய்!.. செம ஜாம்!!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதாலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளார்கள்.

Recommended Video

    நிவர் புயலின் தாக்கம்.. சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு - வீடியோ

    நிவர் புயலால் சென்னையில் காலை முதல் கனமழை அவ்வப்போது பெய்து வருகிறது. புயலின் தூரம் சென்னையிலிருந்து 500 கி.மீ. தூரத்தில் இருந்ததால் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

    பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், சாந்தோம், தேனாம்பேட்டை, மந்தைவெளி, கிண்டி, கோயம்பேடு, ஜிபி சாலை, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில், ஒரே நாளில் உயர்ந்த 10 மில்லியன் கன அடி நீர்.. சென்னை மக்கள் பயப்பட வேண்டாம்செம்பரம்பாக்கம் ஏரியில், ஒரே நாளில் உயர்ந்த 10 மில்லியன் கன அடி நீர்.. சென்னை மக்கள் பயப்பட வேண்டாம்

    மழை நீர்

    மழை நீர்

    தற்போது அலுவலகங்களை விட்டு வீடு திரும்புவோர் மழை நீரில் தத்தளித்து வருகிறார்கள். சில இடங்களில் வாகனங்கள் நின்று விட்டதால் அதை தள்ளிக் கொண்டு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அது போல் அண்ணாசாலை, பிராட்வே உள்ளிட்ட இடங்களிலும் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது.

    பள்ளம்

    பள்ளம்

    இதனால் வீடுகளுக்கு திரும்புவதில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் இருட்டுவதற்குள் வீடு செல்ல மழையில் நனைந்தபடியே செல்கிறார்கள். இன்னும் சிலரோ வண்டியை தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு எங்கே மின்வயர் இருக்குமோ, பள்ளம் இருக்குமோ என்ற அச்சத்துடனேயே கடக்கிறார்கள்.

    பூந்தமல்லி

    பூந்தமல்லி

    சென்னை பூந்தமல்லி ஹைரோடு, ஜிஎஸ்டி சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிண்டி, வடபழனி, கோயம்பேடு பகுதிகளில் வாகனங்கள் இன்ச் இன்ச்சாக நகர்ந்து வருகிறது. சில வாகனங்கள் ரிப்பேர் ஆகிவிடுவதால் இயக்க முடியாமலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

    முறிந்த மரம்

    முறிந்த மரம்

    அது போல் புறநகர் பகுதிகளில் வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. தண்ணீருடன் விஷஜந்துகளும் பரவி வருகிறது. அது போல் மாம்பலம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. இதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    English summary
    Heavy Traffic Jam in most of the Chennai places, Motorists struggling to reach home.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X