சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீச்சல் குளமாக மாறிய சென்னை சாலைகள்.. பெரும் டிராபிக் ஜாமுக்கு ரெடியா போங்க மக்களே..

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சில சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. காலையில் எழுந்து பார்த்த சென்னைவாசிகள் இங்கிருந்த ரோடு எங்கே என கேட்டு டுவிட்டரில் அட்ராசிட்டி செய்து வருகிறார்கள்.

 Heavy water logging in many places across chennai city

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும்ட விடிய விடிய கனமழை கொட்டியது. சென்னையில் 4 மணி நேரத்திற்கு மேல் இடைவிடமால் மழை பெய்ததால் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. சுரங்கப்பாதைகள் பலவற்றில் தண்ணீர் காணப்படுகிறது. சில சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

சென்னையில் எந்த இடம் என்பதை சரியாக கண்டுபிடிக்க இயலவில்லை ஆனால் குளம் போல் சாலை மாறிக்கிடக்கிறது. அதில் கவுத்திப்போட்ட கரப்பான் பூச்சி போல் பைக்குகள் கிடக்கின்றன. சில பைக்குகளை மீன்களை போல் நீந்த வைத்து வாகன ஓட்டிகள் தள்ளிக்கொண்டு சென்றனர்.

காற்றும் மழையும், மின்னலோடு வானுயுர்ந்த அடுக்குமாடி கட்டடங்களை மிரளவைத்து கொண்டிருந்தது. அடுக்குமாடி வீடுகளில் இருந்து வீசிய ஒளியை விட வானில் இருந்து வீசிய ஒளி மிரளவைத்தது. சுழற்றி அடித்து காற்றுடன் பெய்த மழை காட்சி டுவிட்டரில் வெளியாகி உள்ளது.

சென்னையில் மழை வந்தால் வெள்ளம் தேங்கும் மாநகராட்சிக்கும் கடுமையான வேலை வந்திடும். நேற்று வந்த மழை ஒரு சில இடத்தில் பெரிய அளவில் அடைத்துக்கொண்டது . அதை சரி செய்யும் பணியில் சென்னை மாநகாட்சி ஊழியர்கள்.

சென்னை சுரங்கப்பாதைகள் நவீன நீச்சல் குளங்களாக மாறிக்கிடக்கின்றன. வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மாறி கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

சிறிய மழைக்கே லீவு கொடுத்து அசத்தும் பள்ளி கல்வி வாரியம் இந்த முறை இந்த கொடூர மழையிலும் லீவு விடமால் பரீட்சை வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் நொந்து கொண்டே பள்ளிக்கு மழை வெள்ளத்தில் நடந்து சென்றனர்.

 சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. இடி மின்னலுக்கும் பஞ்சமில்லை சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. இடி மின்னலுக்கும் பஞ்சமில்லை

English summary
Heavy water logging in many places across the city. people Prepare for massive traffic jams
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X