சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலர்ட்! நாளை முதல் பைக்கில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. சென்னை போலீஸ் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தலைநகர் சென்னையில் சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் நாளை முதல் முக்கிய உத்தரவு ஒன்று அமலுக்கு வந்துள்ளது.

Recommended Video

    சென்னை: ஹெல்மெட் போடலயா? அப்ப ஃபைன கட்டு: அதிரடி சோதனையில் காவல்துறையினர்!

    ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகள் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதுபோல சாலை விபத்துகள் ஏற்பட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

    “நாங்க குடிக்கிற இடம்” அட்டி மோதலில் இளைஞர் அடித்துக்கொலை.. விபத்தில் இறந்ததாக நாடகம் - 3 பேர் கைது!“நாங்க குடிக்கிற இடம்” அட்டி மோதலில் இளைஞர் அடித்துக்கொலை.. விபத்தில் இறந்ததாக நாடகம் - 3 பேர் கைது!

    குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சாலை விபத்துகளை முறையாகப் பின்பற்றாதது உள்ளிட்டவை சாலை விபத்துகள் ஏற்பட முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

     நம்மை காக்கும் 48

    நம்மை காக்கும் 48

    தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னையில் சாலை விபத்துகளும் அதில் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் உள்ளது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் போது, உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு ஏற்கனவே நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தைக் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது. இத்திட்டத்தின்படி, விபத்து ஏற்படும்போது, முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சையைத் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை

    சென்னை

    அதேபோல சென்னையில் விபத்துகளைக் குறைக்கவும் கூட சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சென்னையில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் கடந்த ஆண்டு மட்டும் இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர்.

     விபத்துகள்

    விபத்துகள்


    இதில் ஹெல்மெட் அணியாததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்களும் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 134 பயணிகளும் உயிரிழந்தனர். அதேபோல 2929 வாகன ஓட்டிகளும் பின்னிருக்கையில் அமர்ந்த 365 பயணிகளும் காயமடைந்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் 5 மாதங்களில் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். ஹெல்மெட் போடாமல் பின் இருக்கையில் அமர்ந்த 18 பேரும் பலியாகி உள்ளனர்.

     ஹெல்மெட் கட்டாயம்

    ஹெல்மெட் கட்டாயம்

    அதேபோல கடந்த 5 மாதங்களில் 741 பேர் இருசக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 127 பேர் என மொத்தம் 841 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகச் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளின் அடிப்படையில் விபத்துகளைக் குறைக்கச் சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. அதன்படி இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர், பின்னர் அமர்ந்து செல்பவர்கள் என இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     சிறப்புத் தணிக்கை

    சிறப்புத் தணிக்கை

    நாளை (மே 23) முதல் இந்த இரு புதிய விதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்யச் சிறப்பு வாகன தனிக்கை நடத்தவும் போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்து இருப்பவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது,

    English summary
    Double helmet rule is to be enforced in Chennai from tomorrow: (தலைநகர் சென்னையில் அமலுக்கு வந்த இரட்டை ஹெல்மெட் விதி) Chennai traffic police Double helmet rule.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X