சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலக உணவு தினத்தில், பசிக்கு எதிராக நீங்கள் உதவிக்கரம் நீட்டுவது எப்படி?

சென்னை: ஜோதியை போல பல ஆயிரக்கணக்கான குழந்தைகளை அன்னமிர்தா திட்டத்தின் மூலம் காப்பாற்ற உதவுங்கள்.

என்ன தான் நம் நாடு வளர்ந்த நாடாக இருந்தாலும் இன்னமும் பல மில்லியன் கணக்கான மக்கள் தினமும் பசிக்கொடுமையை அனுபவித்து வருகின்றனர். அதில் ஒரு குடும்பம் தான் ஜோதியின் குடும்பம். ஜோதி தற்போது குருகிராமில் உள்ள ஒரு அரசாங்க பள்ளியில் தன் படிப்பைத் தொடர்ந்து வருகிறார். அவரது தந்தை ஒரு தினசரி கூலித் தொழிலாளியாகவும், அவரது தாயார் வீட்டு வேலைகளைச் செய்து தன்னுடைய குடும்பத்தை நடத்தி வருகிறார். 3 பேர் அடங்கிய ஒரு சிறிய குடும்பம் என்றாலும் கூட இவர்களுக்கு மூன்று வேளை உணவு என்பது வெறும் கனவு தான். ஏதோ ஜோதிக்கு மதிய உணவு பள்ளியில் தரப்பட்டு விடுவதால் அவள் ஒரு வேளை உணவை நன்றாக சாப்பிட்டு சந்தோஷமாக இருக்கிறாள்.

Help Children By Contributing To Annamrita

ஆனால் ஜோதியை போன்று ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்படும் குழந்தைகள் இன்னமும் ஏராளமானோர் இருக்கிறார்கள். இந்த மதிய உணவு திட்டத்தை பற்றி நிறைய பேர்களுக்கு சரியான விழிப்புணர்வும் இல்லை.

இந்த 2018 ஆம் ஆண்டில் அக்டோபர் 16 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட உலக உணவு தினம் மூலம் பசியை முற்றிலுமாக ஒழிக்க நாங்கள் போராட முடிவெடுத்துள்ளோம். "நம்முடைய செயல்கள் மட்டுமே நம்முடைய எதிர்காலம்" என்பதை நாம் மறக்கக் கூடாது. நாம் எல்லாரும் இணைந்து சரியான வழியில் செயல்பட்டால் 2030 ஆம் ஆண்டில் "பசியின் தடமே இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்". கொஞ்சம் யோசித்து பாருங்கள், 2020 ஆம் ஆண்டில் வல்லரசாகும் இந்தியாவின் கனவை காட்டிலும் ஒரு தனி மனிதனுக்கு பசிக் கொடுமை இல்லாத நாட்டை உருவாக்குவது முக்கியம் அல்லவா?. அதற்காகத்தான் நாங்கள் இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்தி வருகிறோம்.

Help Children By Contributing To Annamrita

கை கொடுங்கள், ஒரு தனிமனிதனின் பசியை போக்க:

1945 இல் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) பசிக் கொடுமை யை ஒழிக்கும் விதமாக உலக உணவு தினம் அறிவிக்கப்பட்டது. நாம் சரியான வழியை மேற்கொண்டு இந்த பசிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க இதுவே சரியான தருணம். 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த பசிக் கொடுமைக்கும், ஊட்டச்சத்து குறைபாட்டுக்கும் நாம் முடிவுகட்ட வேண்டும். அதன் சுவடுகளை அழிக்க வேண்டும்.

Help Children By Contributing To Annamrita

இந்தியா ஒரு விவசாய நாடு என்று மூச்சுக்கு மூந்நூறு தடவை வசனங்கள் பேசுவதிலே நம் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒரு விவசாயின் உண்மை நிலைமை உங்களுக்கு தெரியுமா? நம்மளுக்கு எல்லாம் உணவை அளிக்கின்ற விவசாயி உண்மையில் சாப்பிடுவது பசியைத் தான். பசியால் இறந்து போகின்ற பட்டியலில் இப்பொழுது விவசாயி தான் அதிகமாக இருக்கிறார்கள். விவசாயின் ஏழ்மையான சூழலும், சுற்றுச்சூழல் பருவ நிலை மாற்றங்களால் பஞ்சம் ஏற்பட்டு ஒவ்வொருவரும் விவசாயிமும் பசிக் கொடுமைக்கு தள்ளப்படுகிறான்.

தற்போதைய சூழ்நிலையை பார்த்தால் பசிக் கொடுமை நமது நாட்டின் பொருளாதாரத்தின் ஆணி வேரை பாதித்து வருகிறது. இதே இப்படியே விட்டு விட்டால் எல்லாரும் பசியைக் காணும் தூரம் வரும்.

Help Children By Contributing To Annamrita

எங்களுடைய ஒரே நோக்கம் " நம்முடைய செயல்கள் மட்டுமே நம்முடைய எதிர்காலம்" என்பது தான் என்று இஸ்கான் உணவு நிவாரண அறக்கட்டளை (அன்னமிர்தா திட்டம்) கூறுகிறது. நாங்கள் ஒவ்வொரு குழந்தையின் பசிக்கு மட்டுமல்ல அவர்களின் எதிர்காலத்திற்கு ம் சேர்த்து போராடி வருகின்றோம். இதற்காக இவர்கள் 20 வகையான சமையல் ஏற்பாடுகளை ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 7 மாநிலங்களில் நிறுவி திறமையாக செய்து வருகின்றனர். அன்னமிர்தா திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 1.2 மில்லியன் பேருக்கு உணவை வழங்குகிறது.

Help Children By Contributing To Annamrita

சமீபத்திய 2018 ஆம் ஆண்டில் உணவு கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வுப்படி ஒவ்வொரு 5 விநாடிக்கும் கிட்டத்தட்ட 820 மில்லியன் மக்கள் போதிய உணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த ஊட்டச்சத்து குறைபாடே நிறைய குழந்தைகள் நோய் களால் பாதிப்படையவும், இறக்கவும் வழி வகையாக அமைகிறது. இதை அறிந்த பிறகும் கூட நாம் இப்பொழுதும் செயல்படாவிட்டால் நாம் எப்பொழுது செயல்படப் போகிறோம். நம் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளை எவ்வாறு காக்கப் போகிறோம். பசியால் ஒரு குழந்தை இறந்தால் அதில் நம் ஒவ்வொருவரின் தவறும் இருக்கிறது.

Help Children By Contributing To Annamrita

இந்த உலக உணவு தினத்தை கிட்டத்தட்ட நாடு முழுவதும் பார்த்தால் 150 நாடுகள் கொண்டாடுகின்றனர். அன்னமிர்தா இவர்கள் அனைவரையும் இணைத்து ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இவர்களின் ஒரே பாதை உலகளவில் பசிக் கொடுமை யை ஒழிப்பது மட்டுமே. தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். நாம் ஜெகமாக ஒன்று திரண்டு பசியினை அழித்தாலே போதும். அப்பொழுது பசியே இல்லாத உலகம் நம் கையில் சுழலும். அன்னமிர்தா திட்டத்தின் மூலம் குழந்தைகளின் ஒரு வேளை பசியை போக்குங்கள். வாருங்கள் உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X