• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் மதுரை சிறுமி.. 1 லட்சம் தேவை.. உங்களால் முடிந்த உதவி தேவை

சென்னை: மதுரையில் வினோத குறைபாட்டால் அவதிப்படும் குழந்தையின் சிகிச்சைக்கு உடனே நிதியுதவி செய்திடுங்கள்.

மதுரை கைத்தறி நகரை சார்ந்தவர்கள் தான் மணிகண்டன் பூமாதேவி தம்பதினர். இவர்கள் இருவரும் விவசாய கூலி வேலை செய்கிறார்கள். சொந்த வீடு வாசல் இல்லை. மணிகண்டன் தனக்கு கிடைக்கும் கூலி வேலையை கொண்ட மனைவியை நன்றாக பார்த்துக்கொண்டு தான் இருந்து இருக்கிறார்.

 Help Sathyasri to get her treatment done in Madurai

இந்த சூழ்நிலையிலும் இவர்களின் அன்புக்கு சாட்சியாக மூன்றரை வயதில் பெண் குழந்தையும், இரண்டு வயதில் ஆண் குழந்தையும் பிறந்து இருக்கிறது. இந்த இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தான், இவர்களின் நிம்மதி முற்றிலும் தொலைந்து போய் இருக்கிறது.

 Help Sathyasri to get her treatment done in Madurai

இவர்களின் குழந்தையான, மூன்றரை வயதான சத்திய ஸ்ரீ மீனாட்சிக்கு பிறப்பிலே ஆசனவாய் துளை இல்லை.
வயிற்று வழியாக தான் கழிவுகளை வெளியேற்றுகிறாள். திரவ வகை உணவுப்பொருட்களை தான் உணவாக கொடுக்கிறார்கள். இதுவே சில சமயம் மலச்சிக்கல் ஏற்பட்டு, பிறப்புறுப்பு வழியாக மலக்கழிவுகளை வெளியேறுகிறது.

 Help Sathyasri to get her treatment done in Madurai

இவர்களின் இன்னொரு குழந்தையான இரண்டு வயதான சத்திய மூர்த்திக்கு கழுத்து சுத்தமாக நிற்க்வில்லை.
பின்பக்கமாக கழுத்து சாய்ந்தால்முதுகில் கழுத்து படுகிறது. முன்பக்கமாக கழுத்து சாய்ந்தால் மார்பு பகுதியில் படுகிறது.

 Help Sathyasri to get her treatment done in Madurai

சத்திய ஸ்ரீ மீனாட்சிக்கு அறுவை சிகிச்சை செய்ய பிரபல மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்கு வந்து இருக்கிறது. அவர்களின் பங்களிப்பாக சிறு தொகையையும் தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். சத்திய ஸ்ரீ மீனாட்சிக்கு பரிசோதனை செய்ய 25 ஆயிரமும், அறுவை சிகிச்சைக்கு 75 ஆயிரமும் இப்போது தேவைப்படுகிறது.

 Help Sathyasri to get her treatment done in Madurai

சத்திய ஸ்ரீ மீனாட்சிக்கு உடனே சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அவரின் பெற்றோரிடம் இவ்வளவு பணம் இல்லை. குழந்தையின் சிகிச்சைக்கு அவரின் பெற்றோரால் பணம் கொடுக்க முடியாத நிலையில், நீங்கள் நினைத்தால் இந்த சிறுமிக்கு உதவலாம். நீங்கள் மனது வைத்தால் இந்த சிறுமிக்கு உடனே ஆப்ரேஷன் செய்ய முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து உடனே அந்த சிறுமிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்கள்.

 Help Sathyasri to get her treatment done in Madurai

அவர்களுக்கு நிதி உதவி செய்து, இந்த குழந்தையின் உயிரை காத்திட இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X