"ஆடியோ"வால் திடீர் திருப்பம் .. மாமனாரிடம் கதறிய சித்ரா.. வசமாக சிக்கிய ஹேமந்த்.. கடைசி நிமிட கொடுமை
சித்ராவின் அழிக்கப்பட்ட ஆடியோக்களை போலீசார் மீட்டனர்
சென்னை: சித்ராவின் தற்கொலை வழக்கில், புதிய தகவல் ஒன்று போலீஸ் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது... அதன்படி சித்ரா கடைசியாக பேசியது ஹேமந்த் மாமனாரிடம் என்பது கண்டறியப்பட்டுள்ளது!
சித்ரா இறந்து ஒரு வாரம் ஆன நிலையிலும், அதன் அதிர்ச்சி இன்னமும் ரசிகர்களிடம் இருந்து விலகவே இல்லை.. இது தற்கொலைதான் என்று உறுதிப்படுத்தப்பட்டாலும், அதற்கான காரணத்தை தெரியாமல் தவித்து போய் உள்ளனர்.
போலீசார் ஹேமந்திடமும், சித்ரா பெற்றோரிடம், ஹேமந்த் பெற்றோரிடமும், டிவி சீரியல் குழுவிடமும், ஹோட்டல் நிர்வாகத்திடமும், என அனைத்து தரப்பிலும் விசாரணையை நடத்தி முடித்துள்ளது.. இதில் முதல்நாள் விசாரணையின்போதே, சித்ராவின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ய தொடங்கினர்.

சந்தேகம்
அப்போதுதான் அதில், இருந்த சில பதிவுகள் அழிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.. இதுதான் போலீசாருக்கு முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.. ஒருபக்கம் ஹேமந்திடம் விசாரணை நடத்தி வந்தாலும், அழிக்கப்பட்ட ஆடியோ என்னவாக இருக்கும்? அது ஏன் அழிக்கப்பட்டது? யார் அழித்தது? போலீஸ் விசாரணை தொடங்குவதற்குள் இதனை அழிக்க காரணம் என்ன? என்ற புள்ளியில் இருந்து விசாரணை ஆரம்பமானது..

சைபர் கிரைம்
உடனடியாக அழிக்கப்பட்ட ஆடியோவை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.. சைபர் கிரைம் போலீசார் உதவியும் நாடப்பட்டது.. "ரெகவரி சாப்ட்வேர்" மூலம், அதில் அழிக்கப்பட்ட ஆடியோவை மறுபடியும் மீட்டனர் போலீசார்.. அதில் இருந்த ஆடியோ பதிவுகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட விபரங்கள் திரும்ப பெறப்பட்டன. அப்போதுதான் தெரிந்தது, சித்ரா கடைசியாக அவரது மாமனாரிடம் பேசியிருக்கிறார் என்பது..

சந்தேகம்
அதில், அதுவரை தங்களுக்குள் நடந்த சண்டைகளை ஒன்றுவிடாமல் சொல்லி அழுதுள்ளார்.. அதேபோல, மாமனார் செல்போனில் உள்ள அழைப்புகளையும் ஆராய்ந்து இதனை உறுதி செய்தனர் போலீசார். சந்தேகத்தால், தினம் தினம் கேவலமான வார்த்தைகளால் ஹேமந்த் திட்டி தன்னை காயப்படுத்துவதாக சொல்லி கதறி அழுதாராம் சித்ரா. இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் நடக்கும்போது, இப்படி அவர் செய்வது சரியில்லை என்று கண்ணீர் விட்டாராம்.

தகவல்
இதற்கு பிறகுதான், சித்ரா தற்கொலை செய்துள்ளார்.. ரூமுக்குள் மாற்று சாவியால் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததுமே, சித்ராவின் செல்போனில் இருந்த இந்த தகவல்களை, ஹேமந்த் அழித்துள்ளார். ஆனால், இதுபற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று 6 நாளாக சாதித்து வந்துள்ளார்.. மீட்டெடுக்கப்பட்ட மாமனாரின் ஆடியோவை வைத்துதான் ஹேமந்த் வசமாக சிக்கினாராம்.. ஆனால், ஆர்டிஓ விசாரணை முடிந்தபிறகு, யாரை காப்பாற்ற இந்த கைது நடந்துள்ளது என்று சித்ரா மாமனார் ஏன் கேட்டார் என்றே தெரியவில்லை.. இப்போது இந்த ஆடியோவால் அவரும் வசமாக சிக்கி கொண்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications