சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனித உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கை... மக்கள் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியீடு..!

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் கண்காணிப்பகம் சார்பில் உருவாக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான தேர்தல் அறிக்கையை அதன் நிர்வாக இயக்குநரும் மூத்த வழக்கறிஞருமான ஹென்றி திபேன் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் தமிழகத்தில் நிலவும் முக்கியமான சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

Henry dipen release Election Manifesto for Human Rights

இதனிடையே மக்கள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கீழ்க்கண்ட தலைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

* உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தமிழ்நாட்டில் புதிய காவல் சட்டம்

*காவல் சித்திரவதை, காவல் மரணம், சட்டவிரோதக் காவல் பலப்பிரயோகம், போலி மோதல் சாவுகள் தடுத்தல்

*அமைதியாகக் கூடுவதற்கும், சங்கமாவதற்கும் உரிமை (Freedom of Assembly and Association)

*மனித உரிமை ஆணையங்கள்

*மனித உரிமைக் கல்வி

*தேசியக் கல்விக் கொள்கை-2020

*நீட் தேர்வு ரத்து

*ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கொள்கை முடிவு

*கொடுங்கோன்மைச் சட்டங்கள் ரத்து

*திருத்தப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டம்

*தமிழக மனித உரிமைக் காப்பாளர் பாதுகாப்புக் கொள்கை

*தமிழக சிறைச்சாலைகள் சீர்திருத்த இல்லங்களாக மாற்றப்பட வேண்டும்

*இந்தியக் குடியுரிமை கோரும் தாயகம் திரும்பிய பூர்வீக இந்தியர்கள் மற்றும் இலங்கையில் இருந்து வந்த அகதிகளின் கோரிக்கை ஏற்கப்படவேண்டும்.

மேலும், மக்கள் கண்காணிப்பகம் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முழுமையான தகவல்களை அறிய விரும்பினால் கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

English summary
Henry dipen release Election Manifesto for Human Rights
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X