சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி டெல்டா வேளாண் மண்டல மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்கள் பாதுகாப்புக்கான சட்டமசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

காவிரி டெல்டா மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்களின் பாதுகாப்புக்கு வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Here are the key features of Protected cauvery delta agricultural Zone

இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மசோதாவை தாக்கல் செய்து பேசினார். இந்த மசோதாவின் படி, துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இரும்பு உருக்காலை, செம்பு, அலுமினிய உருக்காலை, விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு ஆய்வு எடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

3 வயது பிஞ்சை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி.. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை3 வயது பிஞ்சை பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளி.. தூக்கு தண்டனையை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் தடை

இந்த தடை தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் முழுவதிலும் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, ப.கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கும் பொருந்தும்.

வேளாண் மண்டல சட்டம் அமல்படுத்துவதற்கு முன்னர் இந்த பகுதிகளில் செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு பாதிப்பு இல்லை. துறைமுகம், குழாய் இணைப்பு சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு ஆகியவை இந்த சட்டத்தினால் பாதிக்கப்படாது.

இந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேற்றுவதற்கு 30 உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பு என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப்படுகிறது. முதல்வர் தலைமையில் துணை முதல்வர், நிதித் துறை அமைச்சர், சட்டத் துறை அமைச்சர், வேளாண்துறை அமைச்சர், தமிழக வேளாண் பல்கலை துணைவேந்தர் உள்பட 30 பேர் குழுவில் இருப்பர்.

இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். அது போல் ரூ 50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும்.

English summary
Here the key features and details of Protected cauvery delta agricultural Zone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X