சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதையெல்லாம் டோன்ட் டச்.. கொரோனா பரவிடுமாம்.. சோ பீ கேர்ஃபுல்!!

Google Oneindia Tamil News

சென்னை: எந்தெந்த பொருட்களை தொடும் போது நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எதையெல்லாம் தொட்டால் கொரோனா பரவும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    அதிர்ச்சி தகவல்: உடுத்தும் ஆடைகளில் உயிர் வாழும் கொரோனா வைரஸ்.. எவ்வளவு நேரம் தெரியுமா?

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

     Here are the list of contact points one came across their day to day life

    இந்த நிலையில் வெளியே சென்றுவிட்டு வீடு வந்தவுடன் கைகளை நன்கு கழுவ வேண்டும். தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் 20 வினாடிகள் தொடர்ந்து கைகளை கழுவ வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு வழங்கிவருகிறது.

    இந்த நிலையில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்களும் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அது போன்ற பொருட்களை நாம் தொடுவதன் மூலமும் இந்த கொரோனா பரவும் என கூறப்பட்டுள்ளது.

    அதன் படி

    • பாக்கெட் போடப்படும் பைகள்
    • லிப்ட் பட்டன்கள்
    • காலிங் பெல்
    • செய்தித் தாள்கள்
    • கார் கதவுகள்
    • காய்கறிகள், பழங்கள்
    • கடை கவுன்ட்டர்கள்
    • அலுவலகத்தில் கதவு கைப்பிடிகள், கழிப்பறைகள்
    • தோட்டத்தில் உள்ள இருக்கைகள்
    • குழந்தைகள் விளையாடும் பூங்கா ஊஞ்சல்
    • வீடுகளில் பல்வேறு இடங்களை சுத்தப்படுத்தும் பணியாட்கள்
    • அனைத்து கதவு கைப்பிடிகள்
    • அமேசான், ஸ்விக்கி டெலிவரி பாக்கெட்டுகள்
    • கடைகளில் வாங்கப்படும் பாக்கெட்டுகள்
    • ரூபாய் நோட்டுகள், காயின்கள்
    • ஊபர் கால்டாக்சி, ஆட்டோ
    • பேருந்து ரயில் கைப்பிடிகள்
    • எச்சிலில் மிதிப்படும் ஷூக்கள், காலணிகள்
    • விமான போக்குவரத்து

    இவை நாம் தொட்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவாமல் வாய், கண், மூக்கு பகுதிகளில் கைகளை வைக்கக் கூடாது. மேற்கண்ட பொருட்களை நாம் தொடுவதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Here are the list of contact points one came across their day to day life. So avoid touching nose, mouth, eyes after contacting these points.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X