சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு.. டாப் கியரில் திருப்பூர்.. ஹாட்ஸ்பாட்டாக கருதப்பட்ட ஈரோட்டில் புதிய பாதிப்பு இல்லை

Google Oneindia Tamil News

சென்னை: திருப்பூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது நேற்று முதல் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஆக உயரத் தொடங்கியது.

    இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத் துறை பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

     98 பேருக்கு

    98 பேருக்கு

    அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது என்றார். மேலும் அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை வைத்து அளிக்கும் சிகிச்சைக்கு அனுமதி கேட்டுள்ளதாக கூறினார்.

     மதுரையில்

    மதுரையில்

    மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்து தகவல்களை தமிழக அரசு அன்றாடம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் திருப்பூரில் ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அது போல் கரூரில் இன்று 15 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துவிட்டது. மதுரை 14 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துவிட்டது.

    சென்னை

    சென்னை

    திருப்பூரில் இரு நாட்களில் மட்டும் 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதித்ததை அடுத்து அங்கு மொத்தமாக எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துவிட்டது. சென்னையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்தமாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 205 பேராக உயர்ந்துள்ளது. ஈரோடு, திண்டுக்கல், நெல்லை, நாமக்கல் பகுதிகளில் இன்று யாருக்கும் தொற்று இல்லை.

     தூத்துக்குடி

    தூத்துக்குடி


    செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், திருவள்ளூரில் 4 பேருக்கும், நாகையில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும் இன்று கொரோனா பாதிப்புள்ளது. அது போல் விழுப்புரம், சேலம், கடலூர், நீலகிரி, காஞ்சிபுரம், தென்காசி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஹாட்ஸ்பாட் என சொல்லப்பட்டு வந்த ஈரோட்டில் இன்று ஒருவருக்குக் கூட பாதிப்பில்லை. திருப்பத்தூரில் ஒருவருக்கும் விருதுநகரில் 6 பேருக்கும், திருவாரூரில் 3 பேருக்கும், வேலூரில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் ஒருவருக்கும், ராமநாதபுரத்தில் 3 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

    மாவட்ட வாரியாக இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை:

    சென்னை- 205
    கோவை- 126
    திருப்பூர்- 79
    ஈரோடு- 64
    திண்டுக்கல்- 56
    நெல்லை- 56
    நாமக்கல்- 45
    செங்கல்பட்டு- 46
    திருச்சி- 43
    தேனி- 40
    கரூர்- 41
    ராணிப்பேட்டை- 38
    மதுரை- 39
    திருவள்ளூர்- 33
    நாகை- 29
    தூத்துக்குடி- 26
    விழுப்புரம்- 23
    கடலூர்- 19
    சேலம்- 18
    திருப்பத்தூர்- 17
    விருதுநகர்- 17
    திருவாரூர்- 16
    வேலூர்- 16
    கன்னியாகுமரி- 15
    திருவண்ணாமலை - 12
    தஞ்சை- 12
    சிவகங்கை- 10
    நீலகிரி- 9
    காஞ்சிபுரம்- 8
    தென்காசி- 5
    ராமநாதபுரம்- 5
    கள்ளக்குறிச்சி- 3
    அரியலூர்- 1
    பெரம்பலூர்- 1

    மொத்தம்- 1173

    English summary
    Here are the list of District wise coronavirus. Tamilnadu has reported 1173 corona positive cases so far.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X