சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

23 மாவட்டங்களில் உங்களது எது?.. நாளை முதல் எவையெல்லாம் இயங்கும்?... முழு விவரங்கள் இதோ...

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் 23 மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் வகை 2-இன் கீழ் வந்துள்ளன.

இந்த 23 மாவட்டங்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

காய்கறி

காய்கறி

  • தனியாக செயல்படுகிற மளிகை பல சரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் மேற்கொண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
 ஈ காமர்ஸ்

ஈ காமர்ஸ்

  • இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
  • இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.
 தனியார் அலுவலகங்கள்

தனியார் அலுவலகங்கள்

  • அனைத்து தனியார் நிறுவனங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
  • இதர தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள், வயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பைக் கடைகள்

  • மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களது கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட் அனுமதிக்கப்படும்.
 இ பதிவு உண்டா

இ பதிவு உண்டா

  • மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுதுநீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவர்.
  • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.
  • பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
  • காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்தவெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.
  • திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
  • வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வாடகை டாக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.
  • வீட்டு வசதி நிறுவனம் (HFCs) வங்கி சாரா நிறுவனங்கள் (NBFCs) குறுநிதி நிறுவனங்கள் (MFIs) 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

English summary
Here are the list of relaxations for 23 districts in TN.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X