சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாட்ஸ் ஆப் ஆடியோ முதல்.. 11 மாத சிறைவாசத்தின் வேதனையிலிருந்து வெளி வந்த நிர்மலா தேவி!

Google Oneindia Tamil News

சென்னை: பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது முதல் இன்று ஜாமீன் வழங்கப்பட்டது வரை அவரது வழக்கில் நடந்தது என்ன?

மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக நிர்மலா தேவி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் 200 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்காத நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனை வழங்கியது.

Here are the timeline for Nirmala Devi case

இதன் மூலம் நிர்மலா தேவியின் சிறைவாசம் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ஆதி முதல் அந்தம் வரை நடந்தது என்ன என்பது குறித்து ஒரு பிளாஷ்பேக். இதோ...

  • ஏப்ரல் 16, 2018- ஆம் தேதி பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக வாட்ஸ் ஆப் ஆடியோ வெளியானது.

    ஏப்ரல் 17- நிர்மலா தேவியின் பூட்டை உடைத்து அவரை கைது செய்தனர் காவல் துறையினர்.

  • ஏப்ரல் 25- நிர்மலா தேவியின் வாக்குமூலத்தின் பேரில் பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது
  • ஏப்ரல் 28- நிர்மலா தேவியின் புகாருக்கு முருகனின் மனைவி மறுப்பு
  • அக்டோபர் 31- மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கேட்டதின் பேரில் மாணவிகளிடம் தவறாக பேசியதாகவும் இருவருடனும் பல முறை உறவு கொண்டதாகவும் நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸிடம் பகீர் வாக்குமூலம் அளித்தார். இதில் அவர் நல்ல பதவிக்காகவும் பணத்துக்காகவும் பலருடன் உறவு கொண்டதையும் ஒப்புதல் வாக்குமூலமாக கூறியுள்ளார்.
  • பிப்ரவரி 12- பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்
  • பிப்ரவரி 28, 2019- நிர்மலா தேவி சிறையில் தற்கொலை முயற்சி. தன்னை யாரும் பார்க்க வரவில்லை என கூறி விரக்தி
  • செப்டம்பர் 18- உயிருக்கு ஆபத்து இருப்பதால் என்னை வேறு சிறைக்கு மாற்றுங்கள் என விருதுநகர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி முறையீடு
  • டிசம்பர் 20- விருதுநகர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட நிர்மலா தேவி, சிறையில் தான் மிகவும் சிரமப்படுவதாகவும் தன் தரப்பு நியாயத்தை கணவர், மாமனார், மாமியார், அண்ணன் ஆகியோரிடம் கூற விரும்புவதாகவும் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.
  • ஜனவரி 31, 2019- என்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர். ஜாமீன் கிடைக்கவிடாமல் பல்வேறு இடையூறுகளை அளிக்கின்றனர் என நிர்மலா தேவி செய்தியாளர்களிடம் தகவல்
  • மார்ச் 1- சிறையில் நிர்மலா தேவிக்கு பாலியல் தொல்லை என அவரது வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி
  • மார்ச் 4- நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மதுரை கிளை நீதிமன்றத்தில் மாதர் சங்கம் மனு. அப்போது நிர்மலா தேவிக்கு ஏன் ஜாமீன் கொடுக்கக் கூடாது என வழக்கறிஞர்கள் கேள்வி
  • மார்ச் 8- மதுரையில் பெண்கள் சிறையில் நிர்மலா தேவி மகளிர் தினம் கொண்டாடியதாகவும் போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்றதாகவும் கூறப்பட்டது.
  • மார்ச் 11, 2019- மதுரை சிறையில் நிர்மலா தேவி பெண்கள் தினத்தை கொண்டாடவில்லை. அவர் வேதனையில் உள்ளார் என வழக்கறிஞர் மறுப்பு. மாதர் சங்கம் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.
  • மார்ச் 12- நிர்மலாதேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  • 200 நாட்களுக்கு மேல் சிறைவாசம்.. நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்200 நாட்களுக்கு மேல் சிறைவாசம்.. நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்

English summary
Timeline for Professor Nirmala Devi case, who gets conditional bail in Chennai HC Madurai branch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X