சென்னை புறநகர் பகுதிகள் எப்படியிருக்கு?.. முட்டிக்கு மேல் வெள்ளநீர்.. இந்தாங்க ஒரு சாம்பிள் வீடியோ
சென்னை: சென்னை புறநகர் பகுதிகள் பெரும்பாலானவை வெள்ளத்தில் மிதக்கின்றன. முட்டி அளவு தண்ணீரால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.
இன்று மாலை கரையை கடக்கத் தொடங்கும் நேரத்தில் காற்று பலமாக வீசும் என கூறப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, ஹஸ்தினாபுரம், தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.
சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்.. கடற்கரை சாலைகளிலும் தடை

புறநகரில் மழை
இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான புறநகர் பகுதிகள் மழை வெள்ளத்தால் மிதக்கின்றன. அப்படி தண்ணீர் தேங்கிய இடம்தான் ஹஸ்தினாபுரம், குரோம்பேட்டைக்கு அருகே உள்ளது. இந்த இடத்தில் கனமழையால் முட்டிக்கு மேல் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மேடு
பள்ளம் எது மேடு எது என தெரியாத அளவுக்கு இருப்பதால் பெரும் வெள்ளமாக இருக்கிறது. இப்பவே இப்படியென்றால் இன்று மாலை புயல் கரையை கடக்கும் போது புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும், இதனால் தண்ணீரின் அளவு இன்னும் உயரும் என தெரிகிறது.

30 ஏரிகள்
மேலும் செம்பரம்பாக்கம் ஏரி, புறநகரில் உள்ள 30 ஏரிகள் திறந்துவிடப்பட்டதால் இது போன்று தண்ணீர் தேங்கியுள்ளதாக ஏரியா மக்கள் தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. புறநகர் பகுதிகள் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாம்பிள்தான்.

கனமழை
முடிச்சூர் வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிப்பதால் மக்கள் பாதுகாப்பு இடங்களை நோக்கி செல்கிறார்கள். நாளை வரை கனமழை பெய்யும் என்பதால் சென்னை புறநகர் பகுதிகளில் மலைப்பகுதிகள் இருப்பதாலும் அங்கு அதிக மழைக்கு வாய்ப்புள்ளது.