சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை.. தா பாண்டியன் கடந்து வந்த பாதை!

Google Oneindia Tamil News

சென்னை: இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை மொழிபெயர்த்தவர் தா பாண்டியன். இவர் கடந்து வந்த பாதை என்ன?

சிறுநீரக பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த தா பாண்டியன் நேற்று முன் தினம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து அவரது உயிர் பிரிந்தது.

88 வயதாகும் தா பாண்டியன் அரசியல், இலக்கியம், எழுத்து, பேச்சாற்றல் என்ற பன்முகத் திறமை கொண்ட தா பாண்டியன், கடந்த 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கீழ்வெள்ளமலைப்பட்டியில் பிறந்தார். இவரது முழு பெயர் டேவிட் பாண்டியன்.

கட்சியில் இணைந்தார்

கட்சியில் இணைந்தார்

காரைக்குடியில் அழகப்பா கல்லூரியில் ஆங்கில பிரிவில் பேராசிரியராக இருந்தார். இதையடுத்து அவர் 1953 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஐக்கிய கம்யூனிஸ்ட் 1983 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை மாநில செயலாளராக இருந்தார். 1989 ஆம் ஆண்டும் 1991 ஆம் ஆண்டும் வடசென்னை தொகுதியின் எம்பியாக இரு முறை தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியை கலைத்துவிட்டு அவர் மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

இளம் வயது சாதனை

இளம் வயது சாதனை

பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 3 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது அப்பதவியை முத்தரசன் வகித்து வருகிறார். இளம் வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியகுழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

மொழிபெயர்த்தல்

மொழிபெயர்த்தல்

இந்திய ரயில்வே தொழிலாளர் நல சங்கத்தின் தலைவராகவும் பாண்டியன் இருந்தார். பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை அவர் புத்தகமாக எழுதியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான ஜனசக்தியின் ஆசிரியராகவும் தா பாண்டியன் பணியாற்றியுள்ளார். இந்திரா காந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பலரது பேச்சுகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

8 மொழிப்பெயர்ப்பு நூல்கள்

8 மொழிப்பெயர்ப்பு நூல்கள்

இதுவரை 6 நூல்களையும் 8மொழிபெயர்ப்பு நூல்களையும் படைத்துள்ளார். இவரது மனைவி ஜாய்ஸ் பாண்டியன் கடந்த 2010 ஆம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு இரு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் டேவிட் ஜவஹர், சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்தவர், திருச்சியில் பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியிலும் பேராசிரியராக ஜவஹர் பணியாற்றியுள்ளார்.

English summary
Here is the biodata of Tha Pandian who was died of Lung disease today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X