சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசுக்கு வந்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சி.. 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு.. பிளான் என்ன?

அதிமுக கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு.. ஆட்சி தக்கவைக்கப்படுமா?- வீடியோ

    சென்னை: அதிமுக கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோரை தமிழக சட்டசபை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய முடிவு எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதற்கு பின் பல காரணங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

    தமிழக அரசியலில் மீண்டும் தகுதி நீக்க காலம் வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்ததாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

    இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நீண்ட நாட்கள் நடந்து இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்தது. இந்த நிலையில்தான் மீண்டும் தகுதி நீக்க அஸ்திரத்தை அதிமுக அரசு கையில் எடுத்துள்ளது. இதற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது.

    அதிமுக எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்.. தமீமுன் அன்சாரி உட்பட 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்? அதிமுக எடுத்தது தகுதி நீக்க அஸ்திரம்.. தமீமுன் அன்சாரி உட்பட 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்?

    பலம் என்ன

    பலம் என்ன

    தற்போது தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக உள்ளது. அதிமுகவிடம் 114 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். திமுகவிடம் 96 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இது இல்லாமல் இரட்டை இலையில் போட்டியிட்ட தமீமுன் அன்சாரி இருக்கிறார். அதேபோல் சுயேச்சை எம்எல்ஏ டிடிவி தினகரன் இருக்கிறார்.

    எப்படி இருக்கும்

    எப்படி இருக்கும்

    தமிழக சட்டசபையில் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை. அதிமுக தற்போது நடைபெறும் 22 சட்டசபை இடைத்தேர்தலில் 4 இடங்களில் வென்றால் கூட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அங்குதான் அதிமுகவிற்கு பெரிய சிக்கல் இருக்கிறது.

    சிக்கல் என்ன

    சிக்கல் என்ன

    தற்போது அதிமுகவிடம் இருக்கும் 114 எம்எல்ஏக்களில் 3 பேர் அதிர்ச்சி எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் அதிர்ச்சி எம்எல்ஏக்கள் ஆவர். அதேபோல் எம்எல்ஏ தமீமுன் அன்சாரியும் அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

    இதுதான் பிரச்சனை

    இதுதான் பிரச்சனை

    இதனால் இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக குறைந்தது 8 இடங்களை வெற்றி பெற வேண்டும். ஆனால் அதிமுகவால் எட்டு இடங்களை வெற்றிபெற முடியுமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதனால்தான் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    கணக்கு எப்படி

    கணக்கு எப்படி

    இந்த 3 பேரை தகுதி நீக்கம் செய்தால் தேர்தலுக்கு பின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அதிமுக கணக்கு போட்டு இருக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றின் மூலம்தான் இந்த கணக்கு போடப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

    என்ன ரிப்போர்ட்

    என்ன ரிப்போர்ட்

    அதன்படி 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 8 இடங்களை வெற்றி பெற வாய்ப்பு கிடையாது. அதிகபட்சம் 4 இடங்களை மட்டுமே வெல்லும். தேர்தல் முடிவு வந்தால் ஆட்சியே கவிழ்ந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஆட்சியை தக்க வைக்க வேறு திட்டம் இருந்தால் செய்யுங்கள் என்று கூறி இருக்கிறார்கள். இதையடுத்தே அதிமுக இந்த முடிவில் இறங்கி இருப்பதாக செய்திகள் வருகிறது.

    English summary
    Here is the reason Why AIADMK decides to disqualify 4 MLA's in the party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X