சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Ponmagal Vandhal: வெண்பாக்களின் எழுச்சி.. வரதராஜன்களின் அதிகாரக் கோட்டையை நொறுங்கி விழச் செய்யும்!

Google Oneindia Tamil News

சென்னை: பொன்மகள் வந்தாள்- சிறுமியாக இருந்தபோது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு தனது தாய்க்கு சைக்கோ கொலைக்காரி என பட்டம் கொடுத்து பிள்ளைகளின் அட்டூழியத்திற்கு ஒத்துஊதிய பணக்காரரின் நிஜ முகத்தை தோலுறுத்தி காட்டுகிறது.

Recommended Video

    ஜோதிகாவின் சர்ச்சை | சூர்யா பரபரப்பு அறிக்கை | Jothika | Surya

    அத்துடன் சிறுமிகளும், பெண்களும் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தர போராட வேண்டும் என்பது இந்த கதையின் கருவாகும்.

    29ஆம் தேதி வெளியான இந்த படம் இந்திய திரைத் துறையில் ஓடிடி தளத்தில் வெளியான முதல் படமாகும். இந்த படத்தில் பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், ஜோதிகா உள்ளிட்டோர் அந்தந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளார்கள்.

    ஹேப்பி நியூஸ்.. மண்டலங்களுக்குள் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை.. அனைத்து வாகனங்களுக்கும் அனுமதிஹேப்பி நியூஸ்.. மண்டலங்களுக்குள் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை.. அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி

     விறுவிறுப்பு

    விறுவிறுப்பு

    ஜோதிகா தனது நடிப்பில் மிளிர்கிறார். மிகவும் மெதுவாக கதை சென்றாலும் அடுத்தடுத்து விறுவிறுப்புகளை காட்டுகிறது. குழந்தைகளை கடத்திய ஜோதி என்ற வடமாநில பெண் ஊட்டியில் ஒரு குழந்தையை கடத்த வரும் போது இரு இளைஞர்கள் அதை தடுப்பதால் அவர்களை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்.

    சிறுமிகள்

    சிறுமிகள்

    அவர் தங்கியிருந்த வீட்டைச் சுற்றி தோண்ட தோண்ட சிறுமிகளின் சடலங்கள்... இதனால் ஜோதி சைக்கோ கொலைக்காரி என முத்திரை குத்தப்படுகிறார். அவர் திருப்பூரில் கைது செய்யப்பட்டு அவர் தங்கியிருந்த வீட்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போது தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீஸாரை தாக்க முயற்சிக்கும் போது ஜோதி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக கதை செல்கிறது. ஈவு இரக்கமில்லாமல் குழந்தைகளை கொல்லும் ஜோதியை ஊரே வெறுக்கும் நிலையில் வழக்கறிஞர் வெண்பா கதாபாத்திரமான ஜோதிகா அவர் நிரபாதி என கூறி பழைய கேஸை தூசுத் தட்டி கையில் எடுக்கிறார்.

    பணக்காரர்

    பணக்காரர்

    இந்த கேஸை தூசு தட்டியவுடன் பணக்காரரான வரதராஜன் (தியாகராஜன்) முகத்தில் ஒரு படபடப்பு தெரிகிறது. அதிலிருந்தே இந்த குழந்தைகளின் கொலைக்கும் வரதராஜனுக்கும் ஏதேனும் தொடர்பிருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது. அரசு தரப்பு வழக்கறிஞராக இருந்த ஒருவரை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு தனக்கு சாதகமான பார்த்திபனை வரதராஜன் கொண்டு வந்ததிலேயே அவர் எப்படிப்பட்ட பணக்காரர் என்பது தெரிகிறது.

     பார்த்திபன்

    பார்த்திபன்

    நீதிமன்றத்தில் வெண்பாவை பார்த்திபன் மடக்கி கேட்கும் கேள்விகளும் வெண்பா கேட்கும் கேள்விகளுக்கு பார்த்திபனின் எதார்த்த பதில்களும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. உண்மையை கண்டுபிடிக்காமல் யாரையோ காப்பாற்ற பெண்ணின் மீது சைக்கோ பட்டம் கட்டுவதா என நீதிமன்றத்தில் ஜோதிகா அழும் சம்பவம் பார்வையாளர்களை அழ வைக்கிறது.

    கொடுமை

    கொடுமை

    ஜோதியின் மகளான வெண்பா தனது தாய் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கிறாரா, பார்த்திபன் வைக்கும் செக்குகளை எப்படி உடைத்தெறிந்து நீதியை நிலைநாட்டுகிறாரா என்பதாக மீதி கதை நகர்கிறது. கதையின் இறுதியில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. தாயின் கண் முன் ஒரு குழந்தை பலாத்காரம் செய்யப்படுவது எத்தனை கொடுமை என்ற வெண்பாவின் கேள்வி பார்ப்போரை சிலிர்க்க வைக்கிறது.

    பதைபதைப்பு

    பதைபதைப்பு

    கதை மெதுவாக சென்றாலும் ஜே ஜே பெட்ரிக்கின் இயக்கம் நன்றாக உள்ளது. ஃஹாசிபா, ஹாசினி போன்ற சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது அவர்கள் எந்த மாதிரியான சித்திரவதையை அனுபவித்தார்களோ என கண்ணால் பார்க்காத போதே பெண் குழந்தைகளை பெற்ற தாய்மார்களின் மனம் பதை பதைக்கிறது.

    குழந்தை

    குழந்தை

    அவ்வாறிருக்கையில் ஜோதி தனது குழந்தையை தேடும் போது ஒரு பாழடைந்த வீட்டில் பலாத்காரம் செய்யப்பட்டதால் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிந்து துணி, கால்களில் பரவியது அப்பப்பா.. பார்க்கவே பயமாக உள்ளது. அதை பார்த்துவிட்டு அழும் தாய் ஜோதியின் நடிப்பு அபாரம்.

     ரத்தக் கசிவு

    ரத்தக் கசிவு

    அந்த வயதில் (5ஆம் வகுப்பு படிக்கும் போதே பெண் குழந்தைகள் பெரியவர்களாகிவிடுகிறார்கள்) பூப்படைவதால் ஏற்படும் ரத்தப்போக்கு தன் குழந்தையின் துணியில் கறையாக படிந்திருப்பதை பார்த்து பூரித்து போகும் தாய்க்கு இதுபோன்ற பணவெறி பிடித்த மிருகங்களால் தனது குழந்தை வேட்டையாடப்பட்டு அதனால் ரத்தம் கசிந்துள்ளதை பார்க்கும் போதே உடல் நடுங்குகிறது.

    பெண்கள்

    பெண்கள்

    ரத்த கறை காட்சிகளை இயக்குநர் தவிர்த்திருந்தால் தாய்மார்களை அச்சம் கொள்ள வைக்காமல் இருந்திருக்கும். யார் தவறு செய்தாலும் அதை பெரியவர்களிடம் சொல்ல குழந்தைகள் முன்வர வேண்டும் என்ற கருத்து ஆழமாக சொல்லப்பட்டுள்ளது. பெற்றவர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு நல்லது கெட்டதுகளையும் குட் டச், பேட் டச்களையும் சொல்லித் தருவது போல் ஆண் குழந்தைகளுக்கும் பெண்களை தெய்வமாக மதிக்க வேண்டும், பெண்களிடம் வன்முறை கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் சொல்லித் தர வேண்டும் என்பது நிதர்சனம். அவசியமும் கூட.

     துரத்தும் கைகள்

    துரத்தும் கைகள்

    பணமிருந்தால் எதையும் செய்யலாம், பெண் நாயையும் விடாமல் தறிகெட்டு திரியலாம் என்பது போன்ற பிள்ளைகளை வளர்த்த வரதராஜனுக்கு கடும் தண்டனை விதிப்பது போல் கதை நகர்ந்திருந்தால் அவரை போன்ற "வரதராஜன்"களுக்கு அச்சத்தை கொடுத்திருக்கும். இந்த வெண்பாவை போல் இன்னும் எத்தனை எத்தனை வெண்பாக்கள் பாலியல் தொல்லைக்குள்ளாக்கப்பட்டு இரவு தூங்கும் போது துரத்தும் கைகளை கண்டு அலறி எழுந்து கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

    பொன்மகள் வந்தாள்- இடைவேளைக்கு முன் திரில்லிங்கும், இடைவேளைக்குப் பிறகு அழுகை, உணர்வு, உண்மையும் கலந்த கதை... தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் குற்றங்கள் தவிர்க்கப்படும்- இது எப்போது நடக்குமோ? கதையின் இறுதியில் வரும் டிவிஸ்ட், பெற்றால்தான் பிள்ளை என்றில்லாமல் அனைத்து குழந்தைகளையும் தன்குழந்தைகளாக பாவிக்கும் மனநிலை தாய்க்கு மட்டுமே உண்டு என்பதை காட்டுகிறது.

    English summary
    Here is the Review of Ponmagal Vandhal which starres Jothika, Bhagyaraj, Parthiban and Thiyagarajan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X