சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னங்க இது.. முத்துப்பேட்டை, காரைக்குடி, மதுரை... இப்படி தமிழகத்துக்குள் டூர் போகும் புரேவி புயல்!

Google Oneindia Tamil News

சென்னை: புரேவி புயல் யாழ்ப்பாணத்திலிருந்து நகர்ந்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, காரைக்குடி, மதுரை என தமிழகப் பகுதிகளில் சுற்றுலா செல்வது போல் செல்கிறது. என்னா வேகமாக ஜங்கு சக்கரம் போல் சுத்துது பாருங்கள்.

இலங்கை அருகே மன்னார் பகுதியில் மையம் கொண்டுள்ள புரேவி புயல் இன்று கன்னியாகுமரி கடல் எல்லையில் மெல்ல நகர்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து மெல்ல நகரும் புரேவி புயல் எங்கெல்லாம் செல்கிறது என்பதை பார்ப்போம்.

இதுகுறித்து தனியார் வானிலை செயலியான விண்டியில் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை அருகே மல்லிப்பட்டினம், அட்டானிக்கு மதியம் 12 மணிக்கு நிலை கொண்டிருக்கிறது. பின்னர் 4 மணிக்கு நிலப்பரப்பை தொடுகிறது.

பாம்பன் அருகே நங்கூரமிட்ட புரேவி புயல்.. ராமேஸ்வரத்தில் 12 செ.மீ. மழை பதிவு பாம்பன் அருகே நங்கூரமிட்ட புரேவி புயல்.. ராமேஸ்வரத்தில் 12 செ.மீ. மழை பதிவு

காளையார்கோவில்

காளையார்கோவில்

அப்படியே இரவு 7 மணிக்கு ஆவுடையார்கோவில் செல்கிறது. இரவு 9 மணிக்கு காரைக்குடி அருகே தேவக்கோட்டைக்கும் கரூருக்கும் இடையே தொட்டு விட்டு போகிறது. நள்ளிரவு 12 மணிக்கு காளையார்கோவில், அதிகாலை 3 மணிக்கு மேலூர், அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு மதுரை செல்கிறது.

போடிநாயகன்னூர்

போடிநாயகன்னூர்

இதனால் வாடிப்பட்டி, போடிநாயகன்னூர், திண்டுக்கல், வேடசந்தூர், கொடைக்கானல், கம்பம், அருப்புக்கோட்டை பகுதியில் நாளை அதிகாலை 3 மணிக்கு நல்ல மழை பெய்யும். பின்னர் மேற்கு தொடர்ச்சி மலை தொடருக்கு செல்கிறது. அங்கு மூணாறு, வால்பாறை, வைக்கம் பகுதிக்கு வந்து அரபிக் கடலுக்கு செல்கிறது.

புரேவி புயல்

புரேவி புயல்

அங்கிருந்து லட்சத்தீவுயை தாண்டி செல்கிறது. இந்த புரேவி புயல் செல்லும் இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த புயலால் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

அது போல் கேரள பகுதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மூணாறு, கொல்லம், வால்பாறை, கொச்சி, பம்பா, எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவிழந்த நிலையிலும் இத்தனை ஊர்களுக்கு இந்த புரேவி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறதே!

English summary
Here is the video of Cyclone Burevi live tracking. Windy app shows the pathway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X