சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எங்கு அதிகம்.. மாநகராட்சி வெளியிட்ட பட்டியல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மண்டல வாரியாக கொரோன பாதிப்பு, உயிரிழப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதில் அதிபட்சமான பாதிப்புகள் தேனாம்பேட்டை மற்றும் அண்ணா நகர் மண்டலத்தில் உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் பார்த்தால் அதிகபட்சமாக அண்ணா நகர், தேனாம்பேட்டை கோடம்பாக்கத்தில் 900க்கு மேல் உள்ளது.

சென்னையில் இதுவரை 548097 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 98 சதவீதம் பேர் குணம் அடைந்துவிட்டனர். அதாவது 537592 பேர் குணமாகிவிட்டனர். வெறும்1.5 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னையில் 8450 பேர் இதுவரை கொரோனா பாதிப்பால் இறந்து போனார்கள்.

தற்போது சென்னையில் 0.4 சதவீதம் பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதாவது 2055 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

உறவினர் சாவுக்கு சென்ற காதல் கணவர் மாயம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் மனைவி அதிர்ச்சி.. ஆணவ கொலையா?உறவினர் சாவுக்கு சென்ற காதல் கணவர் மாயம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் மனைவி அதிர்ச்சி.. ஆணவ கொலையா?

மணலி

மணலி


சென்னையில் திருவெற்றியூர் மண்டலத்தில் 15047 குணம் அடைந்துள்ளனர். இதுவரை 255 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 44 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மணலியில் 8070 பேர் குணம் அடைந்துள்ளனர். 77 பேர் மரணம் அடைந்துள்ளனர். 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாதவரம் மண்டலத்தில் 20513 பேர் குணம் அடைந்துள்ளனர். 253 பேர் பலியாகி உள்ளனர். 81 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவிக நகர்

திருவிக நகர்

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 35476 குணம் அடைந்துள்ளனர். இதுவரை 544 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 114 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ராயபுரம் மண்டலத்தில் 37978 பேர் குணம் அடைந்துள்ளனர். 591பேர் மரணம் அடைந்துள்ளனர். 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருவிக நகர் மண்டலத்தில் 41545பேர் குணம் அடைந்துள்ளனர். 859 பேர் பலியாகி உள்ளனர். 134 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அண்ணாநகர்

அண்ணாநகர்

அம்பத்தூர் மண்டலத்தில் 43105 குணம் அடைந்துள்ளனர். இதுவரை 677 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 149 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அண்ணாநகர் மண்டலத்தில் 56159 பேர் குணம் அடைந்துள்ளனர். 978பேர் மரணம் அடைந்துள்ளனர். 207 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனாம்பேட்டை மண்டலத்தில் 50072 பேர் குணம் அடைந்துள்ளனர். 963 பேர் பலியாகி உள்ளனர். 213 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வளசரவாக்கம்

வளசரவாக்கம்

கோடம்பாக்கம் மண்டலத்தில் 53013 குணம் அடைந்துள்ளனர். இதுவரை 948 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 175பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வளசரவாக்கம் மண்டலத்தில் 35973 பேர் குணம் அடைந்துள்ளனர். 469 பேர் மரணம் அடைந்துள்ளனர். 163 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆலந்தூர் மண்டலத்தில் 24936 பேர் குணம் அடைந்துள்ளனர். 383பேர் பலியாகி உள்ளனர். 99 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெருங்குடி

பெருங்குடி

அடையாறு மண்டலத்தில் 45293 குணம் அடைந்துள்ளனர். இதுவரை 683 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 189 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பெருங்குடி மண்டலத்தில் 25769 பேர் குணம் அடைந்துள்ளனர். 363 பேர் மரணம் அடைந்துள்ளனர். 110 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16621 பேர் குணம் அடைந்துள்ளனர். 141 பேர் பலியாகி உள்ளனர். 105 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிற மாவட்டத்தினர் 28028 பேர் குணம் அடைந்துள்ளனர். 266 பேர் பிற மாவட்டத்தினர் சென்னையில் கொரோனாவால் இதுவரை பலியாகி உள்ளனர். பிற மாவட்டத்தினர் சென்னையில் தற்போது 156 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக சென்னையில் 2055 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

English summary
The Corporation of Chennai has released the details of Covid-19 cases and casualties in 15 zones in Chennai by region. The worst affected areas are tenampet and Anna Nagar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X