சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் வழக்கு.. இறுதி விசாரணை ஒத்திவைப்பு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்ததை அடுத்து, ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். பின்னர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

High Court adjourned case of Stalin seeking cancellation of no-confidence vote held on Feb 18, 2017

அதன்பின்னர், முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, 2017 பிப்ரவரி 18ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்து, ரகசிய வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காத சபாநாயகர், திமுக உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிரோதமானது எனவும் கூறியிருந்தார்.

கொரோனாவால் 10 பேர் பாதித்த போது இருந்த பயம்... 10,000 பேர் பாதிக்கும் போது இல்லை... ஈஸ்வரன் வேதனை.! கொரோனாவால் 10 பேர் பாதித்த போது இருந்த பயம்... 10,000 பேர் பாதிக்கும் போது இல்லை... ஈஸ்வரன் வேதனை.!

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பிலும் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் இறுதி விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

English summary
The Madras High Court has adjourned the hearing of the case of DMK leader Stalin seeking cancellation of the no-confidence vote held on February 18, 2017
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X