சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை எப்போது - அரசு பதில் தர ஹைகோர்ட் நோட்டீஸ்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும் பேரரிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கை ஜூலை 29ஆம் தேதி நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி, அவரது தாய் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

High Court dissatisfied with TN Governor decision

அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கடந்த 2019 நவம்பர் மாதம் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் மீண்டும் பரோல் வழங்க முடியும் என தெரிவித்தார்.

நளினி நலமுடன் உள்ளார்.. கழுத்தில் எந்த வித காயங்களும் இல்லை.. சிறை மருத்துவர்நளினி நலமுடன் உள்ளார்.. கழுத்தில் எந்த வித காயங்களும் இல்லை.. சிறை மருத்துவர்

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இது போன்ற சந்தர்ப்பங்களில் பரோல் வழங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க தேவையில்லை என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன், அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவர்கள்
முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவித்து, 2 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாகவும் பேரரிவாளனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாகவும் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கை ஜூலை 29ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

English summary
The Chennai High Court has expressed dissatisfaction with the governor's failure to decide for two years on the release of seven people serving life sentences in the Rajiv Gandhi assassination case. The judges adjourned the case to July 29, giving the Tamil Nadu government a week to respond to the release of seven people and the granting of parole to Perarivalan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X